கைநிறைய சம்பளம்.. இந்து அறநிலையத்துறையில் நல்ல வேலைவாய்ப்பு.. சீக்கிரம் விண்ணப்பக்கலாம் வாங்க!
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரமும், குறைந்தபட்சமாக ரூ.20 ஆயிரமும் சம்பளம் கிடைக்கும்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. இந்த துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொன்றாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகிறது.

காலியிடங்கள் என்ன?
இந்து சமய அறநிலையத்துறையில் கோவில் புனரமைப்பு பாதுகாத்தல் பணிக்கான பணி தொகுதியில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள மண்டல ஸ்தபதி மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி மண்டல ஸ்தபதி பணிக்கு 10 பேர், உதவி ஸ்தபதி பணிக்கு 38 பேர் என மொத்தம் 48 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்-வயது வரம்பு எவ்வளவு?
இந்த பணியிடங்கள் தற்காலிகமானது. இதனால் தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி மண்டல ஸ்தபதி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 ஆயிரமும், உதவி ஸ்தபதி பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சமாக 40 வயது நிரம்பி இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயது 01.07.2022ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி என்ன?
மண்டல ஸ்தபதி, உதவி ஸ்தபதி பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர் மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Bachelor of Technical in Tradition Architecture) அல்லது மரபு சிற்ப கலையில் இளநிலை நுண்கலை பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 10 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
அதோடு விண்ணப்பத்தாரர்கள் இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ‛‛ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119 உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 6000 034'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பம் 2023 ஜனவரி மாதம் 20ம் தேதி மதியம் 3 மணிக்குள் அந்த முகவரிக்கு சென்றடைய வேண்டும்.
இந்து அறநிலையத்துறை இணையதளம் செல்ல Click Here
பணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications