இந்து மதம் காங்கிரஸுக்கு சொந்தம்! ஆர்எஸ்எஸ் & பாஜக உள்ளே புகுந்துட்டாங்க! கே.எஸ்.அழகிரியின் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : இந்து மதம் காங்கிரஸுக்கு சொந்தமான மதம். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வினர் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்கு புகுந்தவர்கள். அவர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்கள் அல்ல என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், வேலை இல்லத் திண்டாட்டம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்டவற்றைக் கண்டித்தும்
சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன பேரணியில் ஈ.வி.கே.எஸ் இலங்கோவன், கே.வி.தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திர சேகர், மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், அகில இந்திய உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.

 காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

500 க்கும் மேற்பட்ட காங்கிரசார் இந்த பேரணியில் பங்கேற்ற நிலையில் நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.அழகிரி," பாசிசத்தின் உச்ச கட்டத்தில் மோடி அரசு உள்ளது.நேற்று மீண்டும் நம் அலுவலகத்தில் சோதனை செய்தார்கள். மோடிக்கு பெரிய எமன் ஜி.எஸ்.டி. தான். நான் என்ன செய்தாலும் நாட்டில் பிரதிபலிப்பு வராது என மோடி நம்புகிறார். அதிகாரத்தில் இருந்து வீழ்ந்தால் முகவரியே தெரியாது போவார்கள். 5G அலைக்கற்றை ஏலம் நடந்துள்ளது. குறைந்த மதிப்பில்தான் ஏல தொகையை நிர்ணயித்தார்கள். ஆனால் அதை விட குறைந்த விலைக்கு தான் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

ஸ்டாலின் சிறந்த கூட்டணியை அமைத்துள்ளர். அதனால் தான் பாஜகவால் தமிழ்நாட்டை ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஜனநாயகக நாட்டில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதனால் தான் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கைகளை வைத்தார். இதற்க்கு அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கொந்தளித்தனர். தற்பொழுது நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் முன்பை விட சிறந்த முறையில் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு. மோடிக்கு அனைத்து மரியாதைகளையும் தமிழக அரசாங்கம் செய்தது.

பாஜக

பாஜக

நம் இறையாண்மை, கடவுள் நம்பிக்கையை சிதைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது
சோனியாகாந்தி, ராகுல் காந்தி மீதான தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எத்தகைய எதிர்வினை வரும் என நோட்டம்விடுகிறார்கள். நாடு முழுவதும் சிறந்த எதிர்வினையை நாம் காட்டி வருகிரோம். சுதந்திரத்திற்கு பிறகு தற்போதுதான் காங்கிரஸ் கட்சி போராட ஆரம்பித்துள்ளது ஆங்கிலேயர்களை துரத்தியது போல, கொள்ளையர்களையும் துரத்துவோம்

இந்து மதம்

இந்து மதம்

மதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என சொல்கிறோமே தவிர மதம் வேண்டாம் என சொல்லவில்லை. இது எங்களுக்கு சொந்தமான மதம். நீங்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்து புகுந்தவர்கள். நீங்கள் பூர்வீக குடிகள் அல்ல. ராணுவத்தில் இருக்கும் கட்டுப்பாடை, கட்சிக்குள் கொண்டுவந்தால் ராணுவத்தை விட காங்கிரஸ் கட்சி வலிமையானதாகிவிடும். கட்சிக்குத் தேவை சர்வாதிகாரம் அல்ல ; கட்டுப்பாடு ; அனைவரும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும்" எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+