தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை - கூட்டுறவுத் துறை அறிவிப்பு
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக பணியாற்றிய நிலையில், ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்குவதற்காக இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஜனவரி மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஜனவரி 30 ஆம் தேதியன்று ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவித்துள்ளது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று ரேஷன்கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. தமிழக குடும்பங்களுக்கு 2,11,93,724 ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 6,82,12,884 பேர் பயனடைந்து வருகின்றனர்.
PHH என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டை வைத்திருந்தால் முன்னுரிமை குடும்ப அட்டை என்று பொருள்படும். இதற்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். PHH - AYY என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா என்று பொருள்படும். இதற்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
NPHH என்று குறிப்பிட்டவை முன்னுரிமையற்ற அரிசி குடும்ப அட்டைகள் என்று பொருள்படும். இதற்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். NPHH - S என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் முன்னுரிமையற்ற சர்க்கரை அட்டைகள் என்று பொருள்படும். இதற்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
NPHH - NC என்று குறிப்பிட்ட ரேஷன் அட்டைகள் பொருட்களில்லா அட்டை எனப்படும். இதற்கு எந்தவிதப் பொருட்களும் கிடைக்காது. கவுரவ ரேசன் அட்டை என்று இந்த அட்டையை குறிப்பிடுகின்றனர்.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஜனவரி மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக ஜனவரி 30 ஆம் தேதியன்று ரேஷன் கடைகளுக்கு பணி நாளாக அறிவித்துள்ளது. இந்த பணி நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 26 ஆம் தேதி சனிக்கிழமையன்று ரேஷன்கடைகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பிப்ரவரி 26ஆம் தேதி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக பணியாற்றிய நிலையில், ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று விடுப்பு வழங்குவதற்காக இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் நாட்களில் தமிழ்ப்புத்தாண்டு / டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம் / மகாவீரர் ஜெயந்தி ஏப்ரல் 14 வியாழன், மே தினம் மே 1, ஞாயிறு, ரம்ஜான் மே 5, செவ்வாய் , சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, திங்கள், விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31, புதன், காந்தி ஜெயந்தி அக்டோபர் 2, ஞாயிறு, (10) விஜயதசமி அக்டோபர் 10, புதன், தீபாவளி அக்டோபர் 24, திங்கள், கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ஆகிய 12 நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்து தமிக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதுதவிர வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாட்களும் இருக்கின்றன. இந்த விடுமுறை நாட்களை குறித்து வைத்துக் கொண்டு பொதுமக்கள் ரேஷன் பொருட்களை தகுந்த நாட்களில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications