மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு..அனைத்து சனிக்கிழமைகளிலும் இனி பள்ளிகளுக்கு விடுமுறை!
புதிய கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் அளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில், வரும் ஜூன் மாதம் 13ம் தேதியன்று துவங்க இருக்கும் புதிய கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் அளித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2021-22ம் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தாமதமாக தொடங்கப்பட்டு சமீபத்தில் தான் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

அந்த வகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 13ம் ஆண்டு தேதியன்று இறுதித் தேர்வு முடிவடைந்தவுடன் கோடை விடுமுறை துவங்கியது. இப்போது பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டு வரும் ஜூன் மாதம் 13ம் தேதியன்று துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதியன்றும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 27ம் தேதியன்றும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ளதாக கூறினார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 20ம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
10, 11,12ஆம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டில் வகுப்புகள் வழக்கம் போல நடைபெறும் என்றும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வேலை நாட்களாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை தற்போது மாணவர்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications