டாக்டர் அறையில் மதுபானம்.. மருத்துவமனையா? மது விடுதியா? வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பிய எச் ராஜா
சென்னை: சிவகங்கை மாவட்டம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது பாட்டில், நொறுக்குத் தீனிகள் இருந்த வீடியோ வைரலான நிலையில், நோயாளிகளை கவனிக்காமல் மருத்துவமனையிலேயே புத்தாண்டுப் பார்ட்டி நடக்கிறதா? மருத்துவமனையா? மதுபான விடுதியா? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு அன்று நள்ளிரவில் மருத்துவர் இல்லை என்றுக்கூறி நோயாளியை வெளியில் அனுப்பி உள்ளனர். சந்தேகம் அடைந்த நோயாளி தரப்பினர் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சைப்பகுதியில் உள்ள மருத்துவர் அறைக்கு சென்று பார்த்த போது மருத்துவர் அறையில் இருந்த கட்டில் மீது உயர் ரக மதுபான பாட்டில், சிக்கன் துண்டுகள், நொறுக்குத் தீனிகள் இருந்துள்ளன.

இதையடுத்து பணியில் இருந்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனிகள் நிறைந்திருந்த காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் இரவு நேர மருத்துவ பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை என செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பள்ளிக்கூட வளாகம் தொடங்கி மருத்துவமனை வரை போதை பரவலாக்கல் தொடர்வது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களும் பதிலளிப்பார்களா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications