வாட்டிய வறுமை, பட்டினி! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு இவ்வளவு துன்பமா? கண்கள் கலங்குதே
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் பாபர் அசாம் தனது சிறுவயதில் குடும்பத்தின் ஏழ்மை நிலையால் உணவின்றி தவித்தது குறித்து உருக வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளத
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் உள்ளார். இவர் தலைமையிலான பாகிஸ்தான் அணிய ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நேற்று இந்தியாவுடன் மோதியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா 11 ரன், விராட் கோலி 4 ரன், ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன், கில் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து அணியை மீட்டனர்.
இஷான் கிஷான் 82 ரன்கள் , ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 48.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 267 ரன்களை இலக்காக வைத்து பாகிஸ்தான் களமிறங்க தயாரான நிலையில் மழை பெய்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் எனப்படும் விராட் கோலிக்கு நிகராக பாராட்டப்படும் பாபர் அசாம் ஒரு ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும், சிறுவயதில் சாப்பிட கூட உணவு இன்றி பசியோடு வாழ்க்கை நடத்தியதும் தெரியவந்துள்ளது. மேலும் குடும்பத்தில் இருக்கும் சிறிய உணவை மற்றவர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக பாபர் அசாம் தான் சாப்பிடாமல் இருந்தாலும் சாப்பிட்டு விட்டதாக கூறி தனது தந்தையை ஏமாற்றிய உருகவைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பாபர் அசாம் தனது தந்தை பெயர் அசாம் சித்திக், தாய் மற்றும் சகோதரர்கள் சபீர் அசாம், பைசல் அசாம் மற்றும் சகோதரி பரியா அசாம் ஆகியோருடன் வசித்து வருகிறார். பாபர் அசாமின் தந்தை அசாம் சித்திக் வாட்ச் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்தார். அப்போது அவருக்கு போதிய அளவில் வருமானம் என்பது இல்லை. இதனால் அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது. சிறுவயதிலேயே பாபர் அசாம் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கொண்டார். வீட்டில் தாய், சகோதரி, சகோதர்கள் மீது பாபர் அசாமுக்கு அதிக பாசம் வைத்திருந்தார். இதனால் அவர் பல சந்தர்ப்பங்களில் வீட்டில் சாப்பிடாமல் பட்டினியாக இருந்துள்ளார்.
இதுபற்றி பாபர் அசாமின் தந்தை அசாம் சித்திக் கூறுகையில், ‛‛நாங்கள் மிகவும் ஏழ்மையில் இருந்தோம். என்னால் வீட்டில் உள்ள அனைவருக்கும் உணவு கொடுக்க முடியாத சூழல் இருந்தது. இதனை பாபர் அசாம் சிறுவயதிலேயே உணர்ந்து கொண்டார். மேலும் வீட்டில் இருக்கும் கொஞ்ச உணவையும் மற்றவர்கள் சாப்பிட வேண்டும் என்பதற்காக பாபர் அசாம் தியாகம் செய்வார். சாப்பிட்டாயா என நான் கேட்டால் சாப்பிட்டுவிட்டேன் என என்னிடம் பொய் கூறுவார். நானும் பலமுறை உணவு சாப்பிடாமல் சாப்பிட்டதாக அவனிடம் பொய் சொல்லி இருக்கிறேன்'' என்றார்.
மேலும் கிரிக்கெட் விளையாடுவதில் பாபர் அசாமுக்கு விருப்பம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவரது நெருங்கிய உறவினர்களான கம்ரான் அக்மல், உமர் அக்மல் உள்ளிட்டவர்கள் கிரிக்கெட் விளையாடி வந்தனர். இதை பார்த்த பாபர் அசாமும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் குடும்ப சூழல் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. இதனால் அவர் பால் பாயாக இருந்து பயிற்சிகளை மேற்கொண்டார்.
அப்போதும் கூட அங்கு வழங்கும் உணவுகளை அவர் வீட்டுக்கு எடுத்து வந்து குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளார். மேலும் கிரிக்கெட் விளையாட்டுக்கான உபகரணங்களை வாங்க நிதி இல்லாத சூழலில் அவர் உறவினர்களான கம்ரான் அக்மல், உமர் அக்மல் உள்ளிட்டோர்களின் ஷூக்களை எடுத்து பயன்படுத்தி உள்ளார். அதன்பிறகு பாபர் அசாமுக்கு அவரது தாய் தனது நகையை விற்பனை செய்து பணம் வழங்கி கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும் அவரது தாயாரின் கனவு என்பது பாபர் அசாம் சிறந்த கிரிக்கெட் வீரராக வரவேண்டும் என்பதாக தான் இருந்துள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையில் தான் கடந்த 2022ம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் பாபர் அசாம் 58 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அப்போது அவரது தாய் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்தார். இதனை அவரது தந்தை அசாம் சித்திக் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இப்படி பல்வேறு இடர்பாடுகளை சந்தித்த பாபர் அசாம் இன்று தனது கடின உழைப்பால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மாறியுள்ளார். அதோடு 2022ம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார். மேலும் ஐசிசி சார்பில் சிறந்த கிரிக்கெட் வீரருக்காக சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி 2022யையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications