"சென்ட்டிமென்ட்".. சீமான் எப்படி புது கார் வாங்கினார்.. நொறுங்கிய ராசி..என்னாச்சு? திரண்ட "தம்பிகள்"

சீமான் புது கார் வாங்கிய நிலையில், அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான் வாங்கிய புது கார் குறித்துதான், சோஷியல் மீடியாவில் விவாதங்கள் வெடித்து கிளம்பி உள்ளன.. கோவிலில் இந்த காருக்கு சீமான் பூஜை போட்ட போட்டோக்களும் வெளியாகி வருகின்றன.

நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்ததில் இருந்தே திராவிட சித்தாந்தங்களை எதிர்த்தும், அரசியல் செய்தும் வருபவர் சீமான்.. ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை தனித்தே களமிறங்கி வருகிறார்.

தேர்தலில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை என்றாலும், அதைப்பற்றி இவர் கவலைப்படுவதில்லை.. அதேசமயம், கமல், உட்பட எத்தனையோ பேர் இவருடன் கூட்டணி சேர முயன்றபோதும், தன் கட்சிக்கான தனித்துவத்தை தொடர்ந்து கடைப்பிடித்தும் வருகிறார். யாருக்காகவும் தன்னை சமரசப்படுத்தி கொள்வதும் இல்லை.

சீமானை பொறுத்தவரை பாஜகவின் பி டீம் என்று பரவலாக விமர்சிக்கப்படுபவர்... ஆனால், பாஜகவைதான் அதிகம் தன் மேடைகளில் விமர்சிப்பார்..

மிமிக்ரி

மிமிக்ரி

சில சமயம், மோடியைகூட மிமிக்ரி செய்து பேசுவார்... சீமான் பேச்சும் சரி, பேட்டிகளும் சரி, செயல்களும் சரி, பலசமயங்களில் சர்ச்சையாக மாறிவிடுவதும், அல்லது பரபரப்பாக பேசப்படுவதும் தொடர்ந்து வரும் ஒன்றாகும். அந்த வகையில் இப்போதும் ஒரு பரபரப்பு கிளம்பி உள்ளது... சீமான் கார் ஒன்று வாங்கி உள்ளார்.. ஏற்கனவே ஒரு காரை சீமான் வைத்திருந்த நிலையில், இப்போது 8 வருடம் கழித்து புது கார் வாங்கி உள்ளார்.. கடந்த 2014-ல் எம்யூ7 காரை வாங்கினார்...

 8-ம் நம்பர் கார்

8-ம் நம்பர் கார்

ரூ26.50 லட்சம் மதிப்புள்ள இந்த கார் பற்றி அப்போதே விமர்சனங்கள் வெடித்த நிலையில், இன்னொரு கார் வாங்கியிருக்கிறார்.. வழக்கமாக அரசியல்வாதிகள் கார் வாங்கினால் சென்ட்டிமென்ட் பார்ப்பார்கள்.. அல்லது ராசியான நம்பர் பார்த்து வாங்குவார்கள்.. அந்த வகையில், 7-ம் நம்பர் ராசியாக சொல்லப்படும்... ஆனால், சீமானின் கார் நம்பர் 8 என்று வருகிறதாம்.. இந்த கார் என்றில்லை.. இதற்கு முன்பு பயன்படுத்திய கார் நம்பரும் 8-ல் தான் வரும்.. அதே போல பிரச்சாரத்திற்கு ஒரு வேனை பயன்படுத்துவார்.. அந்த வேன் நம்பரும் 8 தானாம்..

சென்ட்டிமென்ட்

சென்ட்டிமென்ட்

பலருக்கு ராசியில்லாத நம்பராக சொல்லப்படும் இந்த 8-ம் நம்பர் காரை, சீமான் விரும்பி கேட்டு வாங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, வண்டி பிளேட்டிலும், ஆங்கில எழுத்துக்களுக்கு பதிலாக தமிழில் எழுதியிருப்பார்.. தான் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலுமே "தமிழ்நாடு" என்று முழுமையாக குறிப்பிட்டிருப்பது, சீமானின் தனி ஸ்டைல். இப்போது விஷயம் என்னவென்றால், சீமான் தன்னுடைய புது காருக்கு ஸ்பெஷல் பூஜை நடத்தி உள்ளார்.. புது டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில் பூஜை செய்துள்ளார்..

 அபிஷேகம்

அபிஷேகம்

இந்த காரில்தான் நேரடியாக கோயிலுக்கு வந்திறங்கினார்.. அங்கே ரெடியாக இருந்த கட்சியினர், அவரை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.. மூலவர் காலடியில் வைத்து காரின் சாவிக்கும், கோவில் வளாகத்தில் அபிஷேகம் செய்து காருக்கும் பூஜை செய்யப்பட்டது.. இந்த கோவிலும் சீமானுக்கு சென்ட்டிமென்ட் கோவிலாம்.. இங்குதான், அவரது குழந்தைக்கு சீமான் மொட்டை அடித்து துலாபாரத்தில் அரிசி மற்றும் வெல்லம் வழங்கினார்... சீமான் இந்த கோவிலுக்கு வருவதற்கு இன்னொரு காரணமும் உள்ளது..

 விபூதி

விபூதி

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், இந்த திருப்போரூர் கந்தசாமி கோவிலில்தான் கல்யாணம் செய்து கொண்டார்.. அதனாலேயே இந்த கோவிலுக்கு அடிக்கடி சீமான் வருவதாக ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். நெற்றியில் விபூதி, கழுத்தில் மாலை, என காட்சி தரும் சீமான் போட்டோக்களும், பூஜை செய்யும் கார் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.. நிறைய விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.. அத்துடன் காரின் விலை பட்டியலும் வெளியாகி இணையதளம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

 அக்கிரமம்

அக்கிரமம்

இந்த காரின் விலை எவ்வளவு? காசு இல்லை, காசு இல்லைன்னு சொல்லிட்டு, சீமானுக்கு இந்த கார் எப்படி வந்தது? சீமான் இப்போது சினிமாவிலும் நடிக்கவில்லை.. படமும் எடுக்கவில்லை.. அரசியலில் மட்டும்தான் இருக்கிறார். அப்படியிருக்கும்போது, அவருக்கு வருமானத்துக்கு வழிதான் என்ன? பலரும் சொல்வதுபோல் கட்சிக்காரர்கள் தரும் பணத்தில்தான் பிழைப்பு நடத்துகிறாரா? தமிழ்நாட்டை ஆள வேண்டும் என நினைப்பவர் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்திட வேண்டும்... இதற்கு முறையான பதிலை சீமான் சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு, 'நீ முதல்ல அவரை கேட்டியா, இவரை கேட்டியா? என்னை பார்த்து ஏன் கேட்கிறே என்றெல்லாம் பதில் கேள்வி கேட்கக்கூடாது? என்று ஒருசாரார் கேள்வி எழுப்புகிறார்கள்.

Recommended Video

    திமுகவினர் மீது அன்பு வைத்திருக்கிறோம் - எதிர்ப்பவர்களெல்லாம் எதிரி இல்லை - சீமான்
    தம்பிகள்

    தம்பிகள்

    ஆனால், மற்றொரு தரப்பிலோ, சீமான் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்.. 8 வருடமாக கட்சி நடத்தும் ஒருவர் கார் வைத்திருக்க கூடாதா? கட்சியில் இருந்து நிதி திரட்டி, அவருடைய தொண்டர்கள் அவருக்கு வழங்கியிருக்க கூடாதா? அறிவாலயம், கோபாலபுரத்தில் போய் பாருங்க.. எவ்வளவு மதிப்பில் கார்கள் நிற்கிறது.. ஒரு ஏரியா கவுன்சிலர், மாவட்ட செயலாளர்கூட கார்களை வைத்திருக்கும்போது, நாங்கள் ஆசையோடு கொடுத்த காரை சீமான் பயன்படுத்துவதில் என்ன தவறு? என்று அவரது தம்பிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+