சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இஸ்லாமிய பெண்கள்தான் காரணம்.. ரொம்ப நன்றி.. "அந்த" 3 பேரையும் தூக்கி எறியுங்க.. எச்.ராஜா சுளீர்

எச்.ராஜா 4 மாநிலங்களில் பாஜக வெற்றி குறித்து பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஜாதி மத அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும், முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டதால் இஸ்லாமிய பெண்கள் அதிகமாக வாக்களித்து இருக்கிறார்கள், உத்தரபிரதேசத்தில் சமூக நீதி வழங்கியது பாஜக என்றும் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தல் ரிசல்ட்டில், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 4 இடங்களை பாஜக வென்றது.. இதனால் பாஜக தரப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.. அந்த பூரிப்பு தமிழ்நாட்டு தலைவர்களிடமும் தென்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எச்.ராஜாவும் குதூகலமாக காணப்பட்டார்.. பட்டாசு வெடித்த பாஜக தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதையடுத்து, செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசியதாவது:

குஜராத் தேர்தலுக்கு தயாராகும் பாஜக - தாமரை சின்னத்துடன் காவி நிற தொப்பியுடன் களமிறங்கும் தொண்டர்கள் குஜராத் தேர்தலுக்கு தயாராகும் பாஜக - தாமரை சின்னத்துடன் காவி நிற தொப்பியுடன் களமிறங்கும் தொண்டர்கள்

2 முறை வெற்றி

2 முறை வெற்றி

"உத்தரபிரதேசம், உத்தராகண்ட்டில் கடந்த 35 ஆண்டுகளாக எந்த கட்சியும் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.. அந்த சாதனையை இப்போது பாஜக முறியடித்துள்ளது... உபியில் பாஜகவின் வெற்றியை தடுக்க எதிர்கட்சிகள் போட்ட திட்டங்கள் அனைத்தும் நொறுங்கிவிட்டது.. உத்தரபிரதேசத்தில் மட்டும் 255 இடங்களை வென்று அசத்தியுள்ளது.

பொய்ப்பிரச்சாரம்

பொய்ப்பிரச்சாரம்

முத்தலாக் தடை சட்டம் கொண்டுவந்ததாலதான், இந்த முறை இஸ்லாமியர்கள் ஓட்டுக்கள் நிறைய விழுந்துள்ளது.. இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று பொய்ப்பிரச்சாரம் செய்த ராகுல் காந்தியின் முகத்தில் இஸ்லாமிய பெண்கள் தாமரைக்கு வாக்களிக்கு கரியை பூசியுள்ளனர்... ராகுல் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு வேஷம் போடுகிறார். அவரது வேடங்களை மக்கள் ஏற்கமாட்டார்கள். நாடு முழுவதும் பாஜக அலை வீசுகிறது. அதில் தமிழ்நாடு மட்டும் தப்ப முடியாது...

சோனியா

சோனியா

தூங்கிக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்ற இந்த மூன்று பேரையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரசுடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வருகிறது.

லவ் ஜிகாத்

லவ் ஜிகாத்

என்ன திட்டம் போட்டலும் சரி, எத்தனை பேர் கூட்டணி வைத்தாலும் சரி 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் அரியணையில் அமரும் என்பதில் சந்தேகம் இல்லை... மிகவும் கடினமான காலத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. சாதாரணமான சமயத்தில் நடந்திருந்தால் எதிர்கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய் இருப்பார்கள்.. தமிழ்நாட்டிலும் லவ் ஜிகாத் பரவ ஆரம்பித்துள்ளது... அதற்கான ஒரு உதாரணம் தான் மதுரை மேலூர் சம்பவம்...

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.. பிரதமர் மோடிக்கு எதிராக பேசுவது மக்களிடம் எடுபடாது.. தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றன... பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது நிரூபணமாகி உள்ளது. மத்திய அரசின் வலிமைமிக்க தலைமையை கொச்சைப் படுத்துபவர்கள் தேசவிரோதிகள். நாட்டைக் காட்டிக்கொடுக்கும் தீய நோக்கம் கொண்டவர்கள் தான் மத்திய அரசு கைப்பற்றி பாரபட்சமான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்" என்றார்.

English summary
How did the BJP win in uttar pradesh election, says senior leader h raja revealed the secret
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X