ஸ்டாலினை அவ்ளோ திட்டினாரே.. 12 வருஷமா கட்சி நடத்தியும் சறுக்கிய சீமான்.. "வெறுப்பரசியல்" காரணமா?
சீமானின் கட்சி படுதோல்வியை சந்திக்க என்ன காரணம்
சென்னை: இந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் முடிவுகள் பல வித்தியாசமான திருப்பங்களை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ரிசல்ட் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
எப்போதும் இல்லாமல் திமுக இந்த முறை அதிமுகவின் கோட்டைகளை கைப்பற்றி உள்ளது.. எப்போதும் இல்லாமல் அதிமுக தனித்து போட்டியிட்டு, இந்த முறை எப்போதுமில்லாத படுதோல்வியை சந்தித்துள்ளது. எப்போதும் இல்லாமல் பாஜக தனித்து போட்டியிட்டு, சொல்லிக் கொள்ளும்படியான இடங்களில் வென்றுள்ளது.
ஆனால், எப்போதும் போல் தனித்து போட்டியிட்ட சீமான் கட்சி, இந்த முறை அநியாயத்துக்கு சுவடே இல்லாமல் காணாமல் போயுள்ளது..

சீமான்
இந்த தேர்தலில் பாமக, நாம் தமிழர், அமமுக, மநீம கட்சிகள் சொல்லிக் கொள்ளும்படியான வாக்கு சதவீதத்தை பெறவில்லை என்றாலும், பிரதான கட்சிகளின் செல்வாக்கையே இந்த தோல்விகள் அசைத்து பார்த்துவிட்டன.. அதிலும், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய கட்சி தாங்கள் தான் என்று, மார்தட்டிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியும் முதுகுளத்தூரில் ஒரே ஒரு ஓட்டு கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளது அதிர்ச்சியானதாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்பட்ட மதுரை மாவட்டம் பேரையூரிலும் ஒரு ஓட்டு கூட பெறாமல் தோல்வியை சந்தித்துள்ளது..

கன்னியாகுமரி
தமிழகம் முழுவதும் 6 இடங்களில் மட்டுமே நாம் தமிழர் வெற்றி பெற்றுள்ளது.. மாநகராட்சி வாக்காளர்களில் ஒருவரும் வெற்றி பெறவில்லை.. நகராட்சி வாக்காளர்களிலும் ஒருவரும் வெற்றி பெறவில்லை.. பேரூராட்சியில் மட்டும் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.. இதில் 5 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் ஆவார்கள்.. இதே கன்னியாகுமரியில்தான் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது என்பது வேறு விஷயம்.. அதேபோல தென்காசியில் ஒரு இடத்தில் வென்றுள்ளது.

இளைஞர்கள்
சீமான் 12 வருஷங்களாக கட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்.. அப்படி இருந்தும் வெறும் 6 இடங்களை பெற்றுள்ளது நாம் தமிழருக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கே நம்ப முடியாமல் உள்ளது.. சீமான் வழக்கமாக எல்லா தேர்தலிலும் சொல்வதைபோல, பணம் இந்த தேர்தலிலும் விளையாடி உள்ளது, பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளனர்.. என்று சொல்லவே செய்தார்.. அப்படியே அவர் சொல்வதில் நியாயம் இருந்தாலும்கூட, இளைஞர்களை அப்படி நினைத்துவிட முடியாது.

திமுக
அதிமுக, திமுக கட்சிக்காரர்களின் ஓட்டுக்கள் ஒருபக்கம் போனாலும், மற்ற தரப்பினர் ஓட்டுக்கள் ஏன் சீமானுக்கு விழவில்லை? இளைஞர்களை கவரும் வகையில் சீமான் இன்னும் செயல்பட வேண்டி உள்ளதா? அல்லது மதரீதியான தாக்குதல் பேச்சுக்களே அவருக்கு பாதகமாக போய் விட்டதா? தன் கட்சியின் பலத்தை சொல்லி ஓட்டு கேட்காமல் திமுகவை ஓயாமல் சீண்டியது, மக்களுக்கே சலிப்பை ஏற்படுத்தி விட்டதா? என்பதெல்லாம் சந்தேகமாக எழுந்துள்ளது.

மறுபரிசீலனை
மேடைக்கு மேடை பாஜகவை திட்டிக் கொண்டு இருக்கும் நிலையில், சீமானை முந்திக் கொண்டு பாஜக மேலே வந்துள்ளதையும் நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் சிந்திக்க வேண்டி உள்ளது.. 12 வருடமாக கட்சி நடத்தி கொண்டிருக்கும் நிலையில், ஒற்றை இலக்க வாக்குகளை பெற்றுள்ளதை அக்கட்சி மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது.

களப்பணி
எத்தனையோ களப்பணிகளை கையில் எடுத்து, சாமான்ய மக்களின் மனசுக்குள் அசால்ட்டாக நுழைந்த கட்சி நாம் தமிழர் கட்சி.. பொதுமக்களை எப்போதுமே நெருங்கி இருப்பதுதான் இக்கட்சியின் பலமாக இருந்து வருகிறது.. எனினும், திமுக என்ற மாபெரும் சக்திகளுடன் மோதக்கூடிய அளவுக்கு நாம் தமிழர் கட்சி இன்னும் வளரவில்லை என்பதையே இந்த தேர்தல் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.. அத்துடன் சீமான் செல்லும் தூரம் இன்னும் நிறைய உள்ளதையும் நினைவூட்ட வேண்டி உள்ளது..!
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications