கிண்டல் பண்ணுவாங்கம்மா.. ‘அவங்களே கப்சிப்.. இப்போ வேணாம்’.. சசிகலா திட்டத்தை ‘புஸ்’ ஆக்கிய ஸ்டாலின்!
சென்னை : கடந்த ஆண்டைப் போல இந்த முறையும் சென்னை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க சசிகலா திட்டமிட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பிளானை கேன்சல் செய்து, 'ஜகா' வாங்கிவிட்டாராம்.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னையில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாத இடங்களில் தேங்கிய மழைநீரை துரித கதியில் செயல்பட்டு வெளியேற்றியுள்ளது திமுக அரசு.
இதற்கிடையில் தான் ஆர்கே நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கத் திட்டமிட்டிருந்தாராம் சசிகலா.
கடைசியில், அவர் செல்லவிருந்த பகுதியில் மழைநீர் அதிகமாகத் தேங்கவில்லை, இப்போது சென்றால் முட்டியளவு தண்ணீரில் படகு ஓட்டிய கதையாகிவிடும் எனச் சொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சைலண்டாக அறிக்கை விட்டுவிட்டு ஜகா வாங்கிவிட்டாராம் சசிகலா.

சசிகலா போட்ட பிளான்
கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெருமழையின்போது, மழைநீர் தேங்கி குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது, சசிகலா, நிவாரணப் பொருட்களை வழங்கினார். இலவச வேட்டி, சேலை மற்றும் 5 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கியிருந்தார் சசிகலா. அதேபோல, இந்த ஆண்டும் சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்கத் திட்டமிருந்தார் சசிகலா. தொடர்ந்து அரசியல் ரீதியாக பல நகர்வுகளைச் செய்து வரும் நிலையில், இந்த முயற்சி தனக்கு பலன் கொடுக்கும் என எதிர்பார்த்தார் சசிகலா.

ஆர்கே நகரில் - திட்டம் கேன்சல்
கடந்த நவம்பர் 4ஆம் தேதி அன்று சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கத் திட்டமிருந்தார் சசிகலா. ஆனால், கடைசி நேரத்தில் சசிகலா அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் செல்லும் திட்டமும், நிவாரணப் பொருட்கள் வழங்கும் திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

கிண்டல் பண்ணுவாங்க
சென்னையில் கனமழை பெய்தாலும், எப்போதும் அதிகமாக தண்ணீர் தேங்கும் ஆர்கே நகர் பகுதியில் இந்த முறை அந்தளவுக்கு மழைநீர் தேங்கவில்லை. தேங்கிய மழைநீரையும், மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றிவிட்டனர். அரசு வேகமாகவே செயல்பட்டு வருகிறது. இதனால் அதிமுக, பாஜக கூட இந்த விஷயத்தை பெரிதுபடுத்தவில்லை. இதனால், இப்போது நாம் சென்று மழை வெள்ள நிவாரணம் கொடுக்கிறோம் என்றால் கிண்டல் செய்வார்கள் என சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையோடு சைலண்ட்
இதையடுத்து நிலைமையை புரிந்துகொண்ட சசிகலாவும், சரி இப்போது வேண்டாம் என உடனே பிளானை கேன்சல் செய்துவிட்டு, அறிக்கை மட்டும் விட்டதோடு சைலண்ட் ஆகிவிட்டாராம். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்கு தேவையான, அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும். மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில், வெள்ள நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான குடியியிருப்புகளில் உள்ளவர்களுக்கு, தங்குமிடம், குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையை வெளியிட்டார் சசிகலா.

கப்சிப்
இந்த மழைக்காலத்தில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாததால் நிச்சயமாக தண்ணீர் தேங்கும், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இதுதான் நிலை என திமுக அரசை வெளுத்தெடுக்கலாம் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், திமுக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் துரிதமான நடவடிக்கையால் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், அதிமுக, பாஜக, சசிகலா என அனைத்து தரப்புமே அமைதியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications