"முன்பு மாதிரி சொதப்பிட கூடாது".. சீக்ரெட்டாக போடப்பட்ட திட்டம்! வேலுமணி வீட்டு ரெய்டு! நடந்தது என்ன
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் மீண்டும் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முதல் ரெய்டு போல இல்லாமல் இந்த முறை ரெய்டு கொஞ்சம் வித்தியாசமாக திட்டமிடப்பட்டு இருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ரெய்டு
சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்தது . கான்டிராக்டர் திருவேங்கடம் கொடுத்த புகார், திமுக ஆர்.எஸ் பாரதி வழக்கு மற்றும் அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்குகளின் விளைவாக இந்த முதல் ரெய்டு நடந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் மொத்தம் 8 இடங்களில் ரெய்டு நடக்கிறது. கோவையில் 41 இடங்களில் ரெய்டு நடக்கிறது.

வழக்கு
இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக 58.23 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமைச்சராக இருந்த போது முறைகேடாக சொத்து சேர்த்ததாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேபோல் இவர், இவரின் உறவினர்கள் அரசு பணத்தில் வெளிநாடு பயணம் மேற்கொண்டது தொடர்பான ஆவணங்களும் கிடைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது அண்ணன் அன்பரசன் உட்பட 13 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த முறை என்ன
கடந்த முறை இந்த ரெய்டின் போது அது தொடர்பான தகவல் முன்பே வேலுமணி தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆம் முதல் ரெய்டின் தகவல்கள் சில அதிகாரிகள் மூலம் வேலுமணி தரப்பிற்கு ஏற்கனவே கசியவிடப்பட்டதாக தகவல்கள் வந்தன. இதனால் முதல்வர் ஸ்டாலினும், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமியும் சில அதிகாரிகளிடம் கண்டிப்பு காட்டியதாகவும் அப்போது நிறைய ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு இருந்தன.

கசிந்தது - மாட்டவில்லை
கடந்த முறை ரெய்டு குறித்து முதல் நாளே இரவே தகவல் கசிந்தால் வேலுமணி வீட்டில் இருந்து முக்கியமான ஆவணங்களை கைப்பற்ற முடியவில்லை. அங்கு 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை தவிர பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை என்றே கூறப்பட்டது. இதையடுத்தே தற்போது மிகவும் சீக்ரெட்டாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. டாப் அதிகாரிகளை தவிர வேறு யாருக்கும் தெரியாமல். ரெய்டு குறித்த எந்த தகவலும் கசிய விடாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறதாம்.

இந்த முறை மிகவும் சீக்ரெட்
கிட்டத்தட்ட டாப் சீக்ரெட் ஆபரேஷன் போல இதை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்தி உள்ளனர். அதோடு இந்த ரெய்டு மிக முக்கியமான நேரத்தில் வந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இப்போதுதான் முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக கூட ரெய்டு எதிர்பார்த்து இருக்கலாம். ஆனால் தேர்தல் முடிந்து சில நாட்களில் ரெய்டு நடக்கும் என்பதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

தேர்தல் முடிந்து எதிர்பார்க்கவில்லை
அதிலும் முக்கியமாக ஏற்கனவே ரெய்டு நடத்தப்பட்ட நபரின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கும் என்றும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இப்படி எதிர்பார்ப்புகளை எல்லாம் மீறித்தான் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்து இருக்கிறது. அரசு தரப்பிலும் சரி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலும் கொஞ்சம் கூட விஷயம் கசியாமல் இந்த ரெய்டை அரங்கேற்றி உள்ளனர், இது வேலுமணிக்கு மட்டுமின்றி மற்ற அதிமுக நிர்வாகிகளுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதே காட்சி
ஏற்கனவே ரெய்டை எதிர்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் நம் மீது ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற அதிமுக நிர்வாகிகளும் கொஞ்சம் பதற்றத்தில் இருக்கின்றனர். மற்றபடி கடந்த முறை போல இந்த முறையும் வேலுமணி வீடு முன் போராட்டம் செய்யும் அதிமுகவினரும் தண்ணீர், டீ, ஜூஸ், சாப்பாடு எல்லாம் வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறையும் அவரின் வீட்டிற்கு வெளியே அதிமுகவினர் தர்ணா செய்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications