20 நிமிடம்.. "ஒரே ரகசியம்".. சித்தப்பா என்ன சொன்னாருப்பா.. சசிகலா போட்ட போடு.. எடப்பாடிக்கு டென்ஷன்
எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் ஓபிஎஸ் காய் நகர்த்தி வருகிறார்
சென்னை: எடப்பாடிக்கு திக் திக் சமாச்சாரம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றே தெரிகிறது.. அப்படி ஒரு ரகசிய மூவ் தேனிக்குள் நடந்து கொண்டிருக்கிறதாம்..!
தன்னுடைய கட்டுபாட்டிலேயே கட்சி இருக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக இருந்து வருகிறது.. ஒருகட்டத்தில் ஓபிஎஸ் இல்லாமேலேயே தனித்து இயங்கவும் முடிவு செய்தார்.
இதற்கு பிறகுதான், தேனியில் அதிமுக கூட்டம், சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம், ஓ.ராஜா சந்திப்பு அதிரடியும் ஓபிஎஸ் தரப்பில் நடந்தது..

ஜெயக்குமார்
என்றாலும், ஜெயக்குமார் விடுதலைக்கு பிறகு ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஓரளவு சமாதானம் ஆனார்கள்.. அப்படி இருந்தும் ஒற்றை தலைமை சலசலப்பு இன்னும் நீங்கவில்லை என்றே கருதப்படுகிறது.. சசிகலாவின் அதிரடிகள் பெருகி வரும்நிலையில், இரட்டை தலைவர்களிடமும் அதிருப்தி நீங்கவே இல்லை... தேனி கூட்டத்தை போலவே, சசிகலாவுக்கு ஆதரவான தீர்மானங்களை பல மாவட்டங்களில் ஓபிஎஸ் நிறைவேற்ற சொன்னதாக செய்திகளும் கசிந்தன.

எடப்பாடி பழனிசாமி
இதற்கு காரணம், தன்னை வழக்கம்போல், கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி விடுவாரோ, அதனால்தான் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற பேச்சை அவராகவே கட்சிக்குள் கிளப்பி விட்டு வருகிறாரோ? என்று ஓபிஎஸ் தரப்புக்கு சந்தேகம் உள்ளது.. ஆனால், சசிகலா பக்கம் சாய்வது போலவே ஏதாவது ஒரு திகிலை கிளப்பி, தன் காரியங்களை ஓபிஎஸ் சாதித்து கொள்வதாக எடப்பாடி தரப்புக்கு சந்தேகம் உள்ளது.

எடப்பாடி ஷாக்
இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு ட்விஸ்ட் சசிகலா தரப்பில் நடந்துள்ளது.. போயஸ் கார்டனில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சமையல் பணியாளராக நீண்ட காலம் பணிபுரிந்தவர் ராஜம்மாள். உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கடந்த வாரம் இயற்கை எய்தினார். ராஜம்மாளின் மறைவு சசிகலாவை ரொம்பவே பதற வைத்துவிட்டது. ராஜம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு சென்றார் சசிகலா.

ராஜம்மாள்
அவர் செல்கிறார் என்பதை அறிந்த ஓபிஎஸ், தனது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பை மருத்துவமனைக்கு அனுப்பி சசிகலாவை சந்திக்க வைத்துள்ளார்.. அதனால் சசி வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே மருத்துவமனைக்கு வந்து காத்திருந்தார் பிரதீப். சசி வந்ததும் அவருடன் இணைந்து ராஜம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சசிகலாவும் ஓபிஎஸ் மகனும் 20 நிமிடங்கள் தனியாக பேசினர். அதில், "உன் சித்தப்பாவிடம் (ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா) சில அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை உன் அப்பாவிடம் (ஓபிஎஸ்) டிஸ்கஸ் பண்ணினாரா? " என சசிகலா கேட்டிருக்கிறார்.

ஜெயபிரதீப்
அதற்கு ஜெய பிரதீப், " அதெல்லாம் எனக்கு தெரியலம்மா. உங்களை சந்திக்கச் சொல்லி அப்பா அனுப்பினார். ஏதேனும் தகவல் சொன்னீர்களாயின் அப்பாவிடம் சொல்வேன் " என்று கேட்க, " இப்போது ஒன்றுமில்லை. சொல்லியனுப்புகிறேன்" என்று மட்டும் தெரிவித்துள்ளார் சசிகலா! அதாவது ஓபிஎஸ் எந்த நேரமும் தன் பக்கம் வந்துவிடக்கூடும் என்ற நம்பிக்கை சசிகலாவுக்கு 200 சதவீதம் இருப்பதாகவே நம்பப்படுகிறது.

பிரதீப்
அதேபோல ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, ஒரு பக்கம் தனது மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை மத்திய மோடி அரசோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளச் சொல்லி டெல்லியில் ஒரு லாபியை உருவாக்கி வைக்கிறார் ஓபிஎஸ். மற்றொரு புறம், இளைய மகன் பிரதீப்பை சசிகலாவின் தொடர்பில் இருக்க காய்களை நகர்த்தியிருக்கிறார். ஆக, எடப்பாடிக்கு எதிரான அத்தனை விசயங்களையும் ரகசியமாக பராமரிக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள் விபரம் அறிந்த அதிமுகவினர்.. இதெல்லாம் தெரிந்தால் எடப்பாடி எப்படி ரியாக்ட் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் கூடி உள்ளது.. பார்ப்போம்..!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications