பிளான் இதுதான்.. சைஸாக காய் நகர்த்தும் பாஜக.. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி.. சசிக்கு ஒரே சான்ஸ்
எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்
சென்னை: இப்போதைய நெருக்கடியான சூழலில் சசிகலா அரசியல் செய்ய, ஒரே ஒரு வாய்ப்பு மட்டும்தான் இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் நம்மிடம் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சட்ட ரீதியாக அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் அரசியல் எதிர்காலம் கேள்வி குறியாக மாறிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்..
எடப்பாடி பழனிசாமியின் மவுசு இதனால் அதிகரித்துள்ள நிலையில், சசிகலா அடுத்து என்ன செய்ய போகிறார்? பாஜக இந்த விஷயத்தை எப்படி பார்க்கிறது என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் நாம் பேசினோம். அவர்கள் சொன்ன கருத்துக்கள்தான் இவை:

சீனியர்
"ஒருசில மாதங்களுக்கு முன்பு, ஒரு சீனியர் நிர்வாகி வெளிப்படையாக எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கேள்வியை கேட்டார்.. "சசிகலா கட்சிக்குள் வருவதால் உங்களுக்கு என்னதான் பிரச்சனை? பலம் பொருந்திய திமுகவை அடக்க வேண்டுமானால், அதிமுகவின் பலத்தை கூட்ட வேண்டியது முக்கியம்தானே? ஒற்றை தலைமையின் கீழ் கட்சி இருப்பதும், தொண்டர்களுக்கு நம்பக்கையை தரக்கூடியதுதானே" என்று கேட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
அதற்கு எடப்பாடி பழனிசாமி, "இப்போ அந்தம்மாவை உள்ளே அனுமதிப்பதால், அதிமுக அரியணை ஏறிவிட போகிறதா? அவருடைய வாக்கு சதவீதம் எவ்வளவு? ஆதரவாளர்கள் எத்தனை பேர்? என்று தெரியுமா? இன்னும் 5 வருடத்துக்கு திமுகதான் ஆட்சி பொறுப்பில் இருக்க போகிறது.. அப்படியிருக்கும்போது, ஒரு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்து வருகிறோம்.. எந்த காரணத்துக்காக அவரை கட்சியில் சேர்க்க வேண்டும்?" என்று திருப்பி கேட்டாராம் எடப்பாடி.. அதனால்தான் இப்போதுவரை எடப்பாடி தரப்பு கறாராக உள்ளது.

சசிகலாவின் அதிரடி
ஆனால், ஓபிஎஸ் அப்படி இல்லை.. சசிகலாவின் அரசியல் முதல் கோர்ட் தீர்ப்பு வரை ஒவ்வொன்றையும் பார்த்து சற்று அதிர்ந்தான் போயுள்ளார்.. பாஜகவை பொறுத்தவரை, சசிகலாவை எந்த ரூபத்திலும் ஆதரிக்கவில்லை என்றே தெரிகிறது.. அதிமுகவில் இப்படி ஒரு பூசல், குழப்பங்கள் இருந்தால் மட்டுமே தங்களால் தமிழகத்தில் காலூன்ற முடியும், அதிமுகவுக்கு மாற்றாக பாஜகவை மாற்ற முடியும் என்று பலமாக நம்புகிறதாம்.. அதனால்தான் சசிகலா விஷயத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.. ஆனால், தினகரன் மீது அதிகமாக நம்பிக்கை வைத்துள்ளது.

டிடிவி தினகரன்
வரப்போகும் தேர்தலில் அமமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. அதுமட்டுமல்ல, இந்த 2 வருட காலத்தில் மிக சரியாக அரசியல் செய்தவர் யார் என்று பார்த்தால் டிடிவி தினகரன்தான்.. இந்த கோர்ட், கேஸ் போன்றவற்றில் ஆரம்பத்தில் இருந்தே ஒதுங்கிவிட்டார்.. இந்த தீர்ப்பு குறித்து ஏற்கனவே தினகரன் எதிர்பார்த்த ஒன்றுதான்.. இதையெல்லாம் பாஜக மேலிடம் உற்று நோக்கி கொண்டுதான் இருக்கிறது..

குழப்பமான முடிவுகள்
சசிகலாவை பொறுத்தவரை, அவரது ஒவ்வொரு அரசியல் வியூகங்கள் தவறானவையாக உள்ளதாக தெரிகிறது.. அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களில்கூட, ஆதரவாளர்கள் நிரம்பி வழிவதில்லை.. எந்த பேட்டி தந்தாலும் அதிலும் குழப்பங்கள் உள்ளன.. அவர் மேற்கொண்டுள்ளது ஆன்மீக சுற்றுப்பயணமா? அரசியல் சுற்றுப்பயணமா? என்பதிலும் தெளிவு இல்லை.. அவ்வளவு ஏன்? அவர் முதன்முதலில் அரசியலில் இருந்து ஓய்வெடுப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டாரே, அதில்கூட தெளிவு இல்லை.. "அம்மா ஆட்சி மீண்டும் அமைய நான் ஒதுங்கி கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.. அப்படியானால், இவர் யாருக்கு வழிவிட்டு ஒதுங்கினார்? எடப்பாடிக்கா? தினகரனுக்கா? அதிலும் தெளிவில்லை..

எடப்பாடி பழனிசாமி
இவரை யாரோ தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.. யார் என்று தெரியவில்லை.. பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போல 2 நாளைக்குமுன்பு கூட பேட்டி தந்துள்ளார்.. அப்படியானால் என்ன சொல்ல வருகிறார்? என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.. நீதிமன்ற தீர்ப்பை வைத்து அரசியல் பலத்தை தீர்மானிக்க முடியாதுதான்.. அந்த வகையில் சசிகலாவின் ஆளுமை இல்லை என்று முடிவெடுத்துவிட முடியாது என்றாலும்கூட, வெளிப்படையான மற்றும் அதிரடியான அரசியலுக்கு சசிகலா தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.. இதைவிட்டால் கடைசிவரை அவர் ஒதுக்கப்பட்டுவிடுவார்" என்றனர்.












Click it and Unblock the Notifications