அடுத்த பிரதமர் வேட்பாளர் அண்ணாமலைக்கு எவ்ளோ சார்? பாஜக மேலிட தலைவரை சீண்டிய ராஜீவ் காந்தி!
சென்னை : டீக்கடைக்காரர் மோடியை தலைவராக மாற்ற மக்கள் வரிப் பணத்தில் கடந்த 7 ஆண்டுகளில் செலவு செய்யப்பட்ட தொகை 4777 கோடி ரூபாய். அடுத்த பிரதமர் வேட்பாளர் அண்ணாமலைக்கு எவ்வளவு பி.எல்.சந்தோஷ் சார்? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.
முன்னதாக அடுத்த பிரதமர் வேட்பாளர் அண்ணாமலையா?அப்படித்தான் ஊருக்குள்ள பேசிட்டு இருக்காராம், மெய்யாலுமா பி.எல்.சந்தோஷ்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் ராஜீவ்காந்தி.
அடுத்த பிரதமர் வேட்பாளராகும் தகுதி பெற்றவர் அண்ணாமலை என திருச்சி சூர்யா தெரிவித்திருந்த நிலையில், ராஜீவ் காந்தி, பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் விளம்பரத்துக்கு செலவு செய்த தொகையைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி இருக்கிறார் ராஜீவ் காந்தி.

4,777 கோடி
பல்வேறு விளம்பரங்களுக்காக மத்திய பாஜக அரசு ரூ.4,777 கோடி ரூபாய் செலவு செய்துள்லதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் விளம்பரங்களுகாக மத்திய அரசு செலவு செய்த தொகை பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சகம். அதன்படி அச்சு ஊடக விளம்பரங்களுக்கு ரூ. 2,187 கோடி ரூபாயும், மின்னணு ஊடக விளம்பரங்களுக்கு 1,754 கோடி ரூபாயும், யூ-டியூப், வானொலி விளம்பரங்களுக்கு 836 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பர செலவு
இப்படியாக மத்திய பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில், விளம்பரங்களுக்காக ரூ.4,777 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் விளம்பரத்திற்காக இவ்வளவு கோடிகளை வாரியிறைத்திருக்கிறது பாஜக அரசு, மோடி பிம்பத்தை மக்களிடம் பதிய வைக்க மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி இருக்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

அண்ணாமலைக்கு எவ்வளவு?
இந்நிலையில், திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், "டீக்கடைக்காரர் மோடி அவர்களை தலைவராக மாற்ற மக்கள் வரிப் பணத்தில் கடந்த 7 ஆண்டுகளில் செலவு செய்யப்பட்ட தொகை 477700000000 (4777 கோடி ) ரூபாய். அடுத்த பிரதமர் வேட்பாளர் நம்ம ஆட்டுக்கார அண்ணாமலைக்கு எவ்வளவு பி.எல்.சந்தோஷ் சார்?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பிரதமர் வேட்பாளர் அண்ணாமலையா?
முன்னதாக, "அடுத்த பிரதமர் வேட்பாளர் அண்ணாமலையா?அப்படித்தான் ஊருக்குள்ள பேசிட்டு இருக்காராம், மெய்யாலுமா பி.எல்.சந்தோஷ்?" என்று கேட்டு ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி. சமீபத்தில், பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா சிவா, அண்ணாமலை பிரதமர் வேட்பாளராகும் தகுதி கொண்டவர் எனக் கூறி இருந்தார். அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான சூர்யா தெரிவித்த அந்த கருத்தை ஒட்டியே ராஜீவ் காந்தி இப்படி ட்வீட் செய்திருந்தார்.

பி.எல்.சந்தோஷ் - அண்ணாமலை
பாஜகவின் தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர். அண்ணாமலையை அரசியலுக்கு இழுத்து வந்ததில் அவரது பங்கு மிக அதிகம் எனக் கூறப்படுவதுண்டு. சந்தோஷின் ஆதரவோடு தான் அண்ணாமலை, மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டுகிறார் என்று தமிழக பாஜகவிற்குள்ளேயே பேச்சு உண்டு. இந்நிலையில் தான், அண்ணாமலை பிரதமர் வேட்பாளரா, அவரை முன்னிலைப்படுத்த எவ்வளவு செலவு செய்யப் போகிறீர்கள் என பி.எல்.சந்தோஷை குறிப்பிட்டு கேள்வி எழுப்பி இருக்கிறார் ராஜீவ் காந்தி.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications