18 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்.. சந்தேகங்களுக்கு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் - இடைக்கால மாதாந்திர அளிப்புத்தொகை வழங்குது தொடர்பான தெளிவுரை குறித்து அனைத்து துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / செயலாளர் மற்றும் அனைத்து துறை தலைவர்களுக்கு நிதித்துறை செயலாளரும், அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான சித்திக் ஐஏஎஸ் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் நிதித்துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் கேள்வி பதில் வடிவில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். அந்த விவரங்களை பார்ப்போம்.

How much will government employees with less than 18 years of service receive Clarifications regarding doubts

கோரப்படும் தெளிவுரை

01.01.2026 அன்றோ (அ) அதற்குப் பின்னரோ ஓய்வு பெற்ற அரசு பணியாளர்கள் (ம) ஆசிரியர்களில் சிலர், மறு நியமன (Re-employment) அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மறுநியமன ஊதியம் நிர்ணயம் செய்யும்போது, இடைக்கால மாதாந்திர அளிப்புத் தொகை மறுநியமன ஊதியத்திலிருந்து கழிக்கப்பட வேண்டுமா?


வழங்கப்படும் தெளிவுரை

பணி ஓய்விற்கு பிந்தைய மறுநியமன நேர்வுகளில், மறுநியமனக் கால ஊதியத்தை நிர்ணயிக்கும்போது மாதாந்திர அளிப்புத் தொகையைக் கழிப்பது தொடர்பான விதிகள், ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிகளுக்காக வெளியிடப்படும் அறிவிக்கையில் இடம்பெறும். அது வரையில், மறு நியமன ஊதியம் நிர்ணயம் செய்யும்போது, இடைக்கால மாதாந்திர அளிப்புத் தொகை கழிக்கப்பட வேண்டும்

கோரப்படும் தெளிவுரை

01.04.2003-க்குப் பிறகு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of Pay) பணியாற்றி, பின்னர் காலமுறை ஊதிய விகிதத்தில் பணியில் (Regular Time Scale) நியமனம் / பதவி உயர்வு பெற்று, மொத்தம் 10 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்து ஓய்வு பெற்றோருக்கு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய காலம் தகுதியான பணிக்காலமாகக் கருதப்பட வேண்டுமா?

வழங்கப்படும் தெளிவுரை

காலமுறை ஊதிய விகிதத்தில் (Regular Time Scale) நிறைவு செய்யப்பட்ட பணிக்காலம் மட்டுமே தகுதியான பணிக்காலமாகக் கருதப்பட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றிய காலம் இதில் சேர்க்கப்படக்கூடாது.


கோரப்படும் தெளிவுரை

அரசாணை (நிலை) எண். 111-ன்படி வழங்கப்படும் மாதாந்திர இடைக்கால நிவாரணத் தொகை, 01.01.2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ ஓய்வு பெற்ற உள்ளாட்சி அமைப்புகள் (நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள்) பணியாளர்களுக்கும் பொருந்துமா?

வழங்கப்படும் தெளிவுரை

அரசாணை (நிலை) எண். 111-ன்படி வழங்கப்படும் இடைக்கால மாதாந்திர அளிப்புத்தொகையானது, CPS திட்டத்தின் கீழ்வரும் தகுதியுள்ள மாநில அரசு பணியாளர்கள்/ஆசிரியர்கள் தவிர்த்த பிற பணியாளர் பிரிவுகளான உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்குப் பொருந்தாது..

How much will government employees with less than 18 years of service receive Clarifications regarding doubts

எதற்காக இந்த தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது

முன்னதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு அரசு கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநருக்கு நிதித்துறை செயலாளர் (செலவினம்) வெங்கடேஷ் அனுப்பிய கடிதத்தில், "10 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 18 ஆண்டுகளுக்கு குறைவான தகுதியான பணிக்காலத்துடன் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் இடைக்கால மாதாந்திரத் தொகையை அனுமதிப்பது, அவர்களின் பணிக்காலத்தின் அடிப்படையில் விகிதாச்சாரப்படி அனுமதிக்கத்தக்க தொகையைவிட இடைக்காலத் தொகை அதிகமாக இருக்க வழிவகுக்கும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை அரசு ஆய்வு செய்தது. இடைக்காலத் தொகையானது, அனுமதிக்கத்தக்க தொகையைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில், அது அதிகப்படியான தொகையை திரும்பப் பெறுவதற்கு வழிவகுத்துவிடும். மேலும், அது பிற்காலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் (டாப்ஸ்) கீழ் நிகர தகுதியான பணிக்காலம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே சரியான அனுமதிக்கத்தக்க தொகையைத் தீர்மானிக்க அதுபற்றி இப்போது கணக்கிட முடியாது.

எனவே சில அறிவுறுத்தல்களை அரசு வழங்குகிறது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால மாதாந்திரத் தொகையாக நிலையான தொகையான ரூ.10 ஆயிரம் மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் அனுமதிக்கப்படும்.

டாப்ஸ் விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் உண்மையான அனுமதிக்கத்தக்க தொகை கணக்கிடப்பட்டு, அதில் வரும் வித்தியாசம், நிலுவைத் தொகையாக வழங்கப்படும். 18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணிக்காலம் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் என்பதில், எது அதிகமோ அந்தத் தொகையுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் சேர்த்து இடைக்காலத் தொகையாக தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

18 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்டவர்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் இடைக்காலத் தொகை அனுமதிக்கப்பட்டிருந்தால், அது வரம்பிற்கு உட்படுத்தப்படும். மேலும், அகவிலைப்படி உள்பட வழங்கப்பட்ட அதிகப்படியான தொகை, இந்த மாதம் முதல் இடைக்காலத் தொகை அல்லது இடைக்கால குடும்பத் தொகையிலிருந்து 10 சம தவணைகளில் திரும்பப் பெறப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+