பண்ணூர், படலம் உள்ள போது.. பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது எப்படி? மிக முக்கிய காரணம்! ஸ்மார்ட் பிளான்
சென்னை: பரந்தூர் விமான நிலைய கட்டுமானத்தை சிலர் எதிர்த்து வரும் நிலையில்.. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினர் எதிர்க்கும் நிலையில்.. இந்த விமான நிலையம் அமைக்க பரந்தூர் எப்படி தேர்வு செய்யப்பட்டது, விமான நிலையத்திற்காக மற்ற இடங்களை தவிர பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது என்று இங்கே பார்க்கலாம்.
மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு ஏன் மாற்று அவசியம்?:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது.
புதிய விமான நிலையம்: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.
எப்படி தேர்வு செய்யப்பட்டது:
இந்த விமான நிலையம் அமைக்க பின்வரும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
சுங்குவார்சத்திரத்தின் வடமேற்கே பண்ணூர் முதலில் பரிசீலிக்கப்பட்டு கைவிடப்பட்டது. காரணம் 1546 குடும்பங்களை மாற்ற வேண்டும். பல உயர் (EHT) கோபுரங்கள் உள்ளன. தற்போதுள்ள ஏழு தொழிற்சாலைகள் காரணமாக அங்கே நிலம் எடுப்பதும் கஷ்டம், விமானம் பறப்பதும் கஷ்டம்.
படலம் பரிசீலிக்கப்பட்டது. செங்கல்பட்டிலிருந்து தெற்கே 20 கிமீ தொலைவில் இந்த அமைந்துள்ளது. கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் ஓடுபாதை அமைக்க தடைசெய்யப்பட்ட பகுதி ஆகும் இது. இங்கே ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் பல பகுதிகள் இருப்பதால் விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி ஆகும்.
சென்னையின் தென்கிழக்கே திருப்போரூர் இருப்பிடம் பரிசீலிக்கப்பட்டு கைவிடப்பட்டது. கல்பாக்கம் அணுமின் நிலையம் காரணமாக ஓடுபாதை அமைக்க தடைசெய்யப்பட்ட பகுதி ஆகும் இது. இங்கே ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் பல பகுதிகள் இருப்பதால் விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி ஆகும்.
கடைசியாக சுங்குவார்சத்திரத்தின் வடமேற்கே பரந்தூர் பரிசீலிக்கப்பட்டது. கடைசியில் தேர்வு செய்யப்பட்டது. காரணம் 1005 குடும்பங்கள் இடம்பெயர்ந்தால் போது., பன்னூர் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை மற்றும் சென்னை மெட்ரோவுடன் ஒப்பிடும்போது மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் குறைந்த அளவு உள்ளன. அதிகமாக காலி நிலங்கள் உள்ளன. விமானப்படை நிலங்கள், விமானப்படை தடைகள் இங்கே இல்லை.
எத்தனை ஏக்கர் எடுக்கப்படுகிறது:
இந்த விமான நிலையத்தை அமைப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இந்த விமான நிலையத்திற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூர் மற்றும் 19 கிராமங்களில் 3,774.01 ஏக்கர் பட்டா நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பச்சை சிக்னல் கொடுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதி அனுமதி வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்பை விட 770 ஏக்கர் கூடுதலாக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் வரும் நாட்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகள் தீவிரம்;
பிப்ரவரிக்குள் இந்த டெண்டர் விடப்பட்டு அங்கிருந்து வெளியேறும் மக்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பரந்தூர் விமான நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த திட்டம் தீவிரமாக முன்னேறி வருகிறது. இதற்கான தொழில்நுட்ப ரீதியாக டிபிஆர் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. முதல் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கான நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு விட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் தோற்றம் சாட்டிலைட் புகைப்படங்களில் தெளிவாக உள்ளது. சமன்படுத்தப்பட்ட நிலங்களின் தோற்றம் இதில் காணப்பட்டு உள்ளது. இதிலேயே அருகிலேயே ஒரு கோடு போன்ற அமைப்பு உள்ளது. அதுதான் பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் வே ஆகும். பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் அடுத்த வருடம் திறக்கப்படும் சாலை இதன் வழியேதான் வர உள்ளது.
சமீபத்தில் வெளியான டிபிஆர் அறிக்கையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையம் 2029 இல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பரந்தூரில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையின்படி, விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஜனவரி 2026 இல் தொடங்கப்பட்டு நான்கு கட்டங்களாக உருவாக்கப்படும்.
20 மில்லியன் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்ட முதல் கட்டம் 36 மாதங்களில் முடிக்கப்பட்டு 2029ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். விமான நிலையத்தில் இரட்டை ஓடுபாதைகள், இருபுறமும் டாக்ஸிவே, மூன்று பயணிகள் முனையங்கள் மற்றும் பிரத்யேக சரக்கு முனையம் ஆகியவை இருக்கும். பெரிய விமானங்களை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications