சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல தொகுதிகளில்.. தண்ணீர் குடித்த திராவிட கழகங்கள்.. 'சுள்ளான்' கட்சிகள் அதகளம்

Google Oneindia Tamil News

சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், சிறிய கட்சிகள் திமுக, அதிமுகவுக்கு பல தொகுதிகளில் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளன.

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான இரு கூட்டணிகளும் கிட்டத்தட்ட 85 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. இவ்விரு கூட்டணியிலும் இடம் பெறாத சிறிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை என்றாலும், அவைகள் பல இடங்களில் இவ்விரு திராவிட கட்சிகளின் வாக்குகளை பலமாகவே சேதப்படுத்தியுள்ளன.

கோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்? கோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 2.52 சதவீத வாக்குகளையும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) 2.35 சதவீத வாக்குகளையும் பெற்றது. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக களம் கண்ட இவ்விரு கட்சிகளும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி, அக்கட்சிகளின் தலைவர்களும் கூட தங்களது தொகுதிகளில் ஏமாற்றத்தை சந்தித்தனர். இருப்பினும், இவ்விரு கட்சிகளும் பல இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றன.

 திமுகவுக்கு அச்சுறுத்தல்

திமுகவுக்கு அச்சுறுத்தல்

உதாரணமாக, டிடிவி தினகரனின் அமமுக, குறைந்தது 20 இடங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை குலைத்தது. பாஜகவின் பி-டீம் என்று குற்றம் சாட்டப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பல இடங்களில் அதிமுகவை விட பெரும்பாலும் திமுகவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது.

 அதிகரித்த வாக்கு சதவிகிதம்

அதிகரித்த வாக்கு சதவிகிதம்

பல இடங்களில் வித்தியாசத்தை ஏற்படுத்திய மற்றொரு சிறிய கட்சி தமிழ் தேசியவாத தலைவர் சீமானின் நாம் தமிழர் கட்சியாகும். ஒரு இடத்தில் கூட வெல்லாத போதிலும், கட்சி தனது வாக்கு சதவிகிதத்தை 6.58 சதவீதமாக உயர்த்தியது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 1 சதவீதம் அதிகமாகவும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 4 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. இக்கட்சி பல இடங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கணிப்புகளையும் தகர்த்தது.

 விருத்தாச்சல கணக்கு

விருத்தாச்சல கணக்கு

அதேசமயம், அமமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த 'கேப்டன்' விஜயகாந்தின் தேமுதிக (2011 ல் பிரதான எதிர்க்கட்சி) உண்மையில் வாக்கு சதவிகிதத்தில் (0.43%) பூஜ்ய நிலையை எட்டியுள்ளது. எனினும், விருத்தாசலத்தில் தொகுதியில் அதிமுக கூட்டணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது தேமுதிக. அக்கட்சியின் வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்திருந்தாலும், 25,908 வாக்குகளைப் பெற்றிருந்தார். அங்கு, கடும் போட்டிக்கு இடையே காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 862 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணியை வீழ்த்தினார்.

 மயிலாடுதுறை நிலவரம்

மயிலாடுதுறை நிலவரம்

பா.ஜ.க தலைவர் ஹெச்.ராஜாவை, காங்கிரஸ் 21,589 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த காரைக்குடியில், அமமுக தனித்து 44,864 வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் 2,742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மயிலாடுதுறை தொகுதியில், தினகரனின் கட்சி 7,282 வாக்குகளைப் பெற்றது.

 பிரிந்த வாக்குகள்

பிரிந்த வாக்குகள்

தினகரனின் அத்தை சசிகலாவின் சொந்த ஊரான மன்னார்குடியில், திமுக 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு அமமுக 40,481 வாக்குகளையும், அதிமுக 49,779 வாக்குகளையும் பெற்றது. அதேபோல், அதிமுகவின் தோல்வியில் அமமுக பங்கு வகித்த மற்ற தொகுதிகளில் திருப்பூர், சங்கரன்கோவில், சத்தூர் ஆகியவை அடங்கும்.

 கவலை தரும் செய்தி

கவலை தரும் செய்தி

திமுக தேர்தலின் வெற்றியாளராக இருக்கும் போதிலும், 2019 மக்களவை தேர்தலோடு ஒப்பிடுகையில் அதன் வாக்குப் சதவிகிதம் குறைவது நிச்சயம் கவலையை ஏற்படுத்தும். 2019 மக்களவைத் தேர்தலில், 39 இடங்களில் 38 இடங்களை வென்ற திமுக, 52 சதவீத வாக்குகளைப் பெற்றது. தற்போது 45-46 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது.

English summary
small parties vote shares tn assembly - தமிழக தேர்தல்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X