சூப்பர் தமிழ்நாடு.. நம்பர் 1.. புகழ்ந்து தள்ளிய நார்வே "எரிக் சொல்ஹெய்ம்".. சிலிர்க்க வைத்த டேட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடலை நார்வே "எரிக் சொல்ஹெய்ம்" புகழ்ந்து பாராட்டி இருக்கிறார். தமிழ்நாட்டில் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியை அவர் பாராட்டி இருக்கிறார்.

தமிழ்நாடு பல்வேறு துறைகளில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. 60 வருட திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பல மடங்கு முன்னேறி உள்ளது. ஜிடிபியில் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமை ஒழிப்பு என்று மட்டுமில்லை ஐடி துறை, கல்வி, தொழிற்துறை, ஆராய்ச்சி துறை, ஏற்றுமதி, உற்பத்தி துறை என்று பல துறைகளில் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது.

இதன் காரணமாகவே வடஇந்தியர்கள் பலர் தமிழ்நாட்டிற்கு வேலை தேடி தினமும் சாரை சாரையாக வந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு பல்வேறு துறைகளில், பல்வேறு விதங்களில் முன்னேறிய மாநிலமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ துறை சிறப்பாக உள்ளது. இங்கு சராசரியாக ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும் 40 பெட்கள் உள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் 99435 பெட்கள் உள்ளன. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகம். குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாடு பக்கத்தில் கூட வர முடியாத நிலை உள்ளது. soruce - @TamilnaduStats

விலைவாசி

விலைவாசி

இந்தியாவில் விலைவாசி உச்சத்தில் இருக்கும் போது கூட தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுப்பாட்டில்தான் உள்ளது. விலைவாசி என்பது பொருளாதார நிலையை பொறுத்தே இருக்கும். பணவீக்கம் அதிகரித்தால் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்று அர்த்தம். உதாரணமாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பால் விலை லிட்டருக்கு 40 ரூபாய் என்ற அளவில் குறைவாக உள்ளது. தேசிய சராசரி 55 ரூபாய் ஆகும். குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் விலை மிக அதிகம் உள்ளது. soruce - @TamilnaduStats

பாராட்டு

பாராட்டு

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடலை நார்வே "எரிக் சொல்ஹெய்ம்" புகழ்ந்து பாராட்டி இருக்கிறார். தமிழ்நாடு அரசின் காலநிலை நிர்வாகக் குழு உறுப்பினராக இவர் செயல்பட்டு வருகிறார். இவர் நார்வே நாட்டை சேர்ந்தவர். அங்கு உள்ள இடது சோசலிஷ கட்சியின் தலைவர். இலங்கைக்கு நார்வே சார்பாக போரின் போது சென்ற சமாதான குழுவில் இவர் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள் எண்ணிக்கையை இவர் புகழ்ந்து பாராட்டி உள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளனர். தமிழ்நாட்டில் 38837 தொழிற்சாலைகள் உள்ளன. soruce - @TamilnaduStats

நம்பர் 1

நம்பர் 1

2000க்கு முன்பில் இருந்தே தமிழ்நாடு இந்த லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகியவை இரண்டு , 3, 4ம் இடங்களை மாறி மாறி பிடித்து வருகின்றன. ஆனால் ஒருமுறை கூட இந்த மாநிலங்கள் தமிழ்நாட்டை நெருங்கியது கூட கிடையாது. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 28479 தொழிற்சாலைகள் உள்ளன. 25610 தொழிற்சாலைகள் மகாராஷ்டிராவில் உள்ளன. தமிழ்நாட்டில் 38837 தொழிற்சாலைகள் உள்ளன.இதைத்தான் நார்வே "எரிக் சொல்ஹெய்ம்" புகழ்ந்து பாராட்டி இருக்கிறார். இந்தியாவின் தொழிற்சாலை வளர்ச்சியை தமிழ்நாடு ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு இதில் முன்னிலையில் இருக்கிறது. சூப்பர் என்று புகழ்ந்து பாராட்டி உள்ளார். soruce - @TamilnaduStats

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+