கருகிப்போன எலும்புதான் மிச்சம்! ஏர் இந்தியா விபத்து..டிஎன்ஏவை எடுப்பதில் சிக்கல்.. உதவும் ஒற்றை பல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. லண்டன் நோக்கிச் சென்ற விமானம், பி.ஜே மருத்துவக் கல்லூரி அருகே குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் தவிர மற்ற அனைவரும், தரையில் இருந்த பலரும் உயிரிழந்தனர்

அகமதாபாத் அரசு மருத்துவமனையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற முடியாமல் உறவினர்கள் மிகுந்த வேதனையுடன் காத்திருக்கின்றனர். உடற்கூறு ஆய்வை விரைந்து முடித்து, குடும்பத்தினரின் துயரைக் குறைக்கும் வகையில் 80 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை ஐந்து குடும்பத்தினரின் DNA மாதிரிகள் மட்டுமே ஒத்துப்போனதால், உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கின்றனர்.

Ahmedabad Plane Crash

டாக்டர் தமன்னா பர்மார் (33) அங்கே தற்போது டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்கும் பணிகளை செய்து வருகிறார். அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பலரின் உடல்கள் மொத்தமாக கருகிவிட்டது. முடி இல்லை. தசைகள் இல்லை. அடையாளம் காண முடியாது. ரத்தம் ஒரு சொட்டு கூட இருக்காது. இது போன்ற தீ ஏற்படும் போது செயற்கை மூட்டுகள் உருகுவதில்லை. ஆனால் அதை வைத்து டிஎன்ஏவை எடுக்க முடியாது எலும்புகள் உருகுவதில்லை,.. ஆனால் இங்கே எலும்புகள் டிஎன்ஏவை எடுக்க முடியாத அளவிற்கு உருகி உள்ளது. பற்கள் உருகுவதில்லை. மென்மையான திசுக்கள் எரிந்து சாம்பலானாலும் இவை அப்படியே இருக்கும்.

அதை வைத்துதான் டிஎன்ஏ எடுத்து வருகிறோம். ஏர் இந்தியா 171 விமான விபத்தில் பலியான 241 பேரின் உடல்களிலிருந்து டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்க பல் மருத்துவர்கள் தேவை என்று வாட்ஸ்அப் குழுவில் வந்த மெசேஜ் காரணமாக நான் இந்த வேலையில் இறங்கினேன்.

இந்த விபத்து எந்த அளவிற்கு மோசமானது என்றால்.. இறந்தவர்களின் ரத்தம் சூடாக இருக்கிறது. அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நான் போனது கிட்டத்தட்ட 24 மணி நேரம் கழித்தே. அப்போதும் கூட ரத்தம் சூடாக இருந்தது. குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியின் தனி உதவியாளர் ஒரு டிஜிட்டல் பல் ரேடியோகிராஃபை எடுத்து வந்தார். ரூபானி அந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார், அவரது உடலை செயற்கை பற்கள் மூலம் அடையாளம் கண்டனர். மேலும் சில செயற்கை பற்கள் அடையாளங்காட்டியாக இருந்தன. ஒரு பெண்மணிக்கு உலோக செயற்கைப் பல் இருந்தது, இன்னொருவருக்கு பீ.எஃப்.எம் (உலோகத்துடன் கலந்த பீங்கான்) செயற்கைப் பல் இருந்தது.

இதனால் அவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. குழந்தைகள் நிறைய பேர் இருந்தனர், அவர்களின் வாயில் இருந்த பால் பற்களை வைத்து வயது கணக்கிடப்பட்டது. ஒரு குழந்தைக்கு நான்கு வயது இருக்கும். அனைத்தும் உதிர்ந்து போகும் கடைவாய்ப்பற்களும் முளைத்திருந்தன. இந்த வயதில் குழந்தைகளுக்கு முதல் செட் கடைவாய்ப்பற்கள் முழுமையாக வளர்ந்திருக்கும், என்று கூறி உள்ளார்.

சாம்பல், நகைகள் மற்றும் காத்திருக்கும் குடும்பங்கள்

தாடை பகுதியை வெட்டி பற்களை எடுக்க அறுவை சிகிச்சை கருவிகளை மருத்துவர்கள் பயன்படுத்தினர். ஒவ்வொருவரின் வாயிலிருந்தும் ஒரு கடைவாய்ப்பல்லை எடுத்து ஆய்வு செய்கின்றனர். கடைவாய்ப்பற்கள் டி.என்.ஏ பகுப்பாய்விற்கு நம்பகமான ஆதாரமாகக் கருதப்படுகிறது.

சிலரை மட்டும் அடையாளம் காண்பது எளிதாக இருந்தது, நகைகள் இருந்தன, ஆடைகளின் நிறத்தை வைத்துக்கூட கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் பலருக்கு நகை வெப்பத்தில் உருகி உடலோடு ஓட்டி இருந்ததால் அதை வெட்டி எடுக்க வேண்டியதாகிவிட்டது, என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+