செல்வமகள் சேமிப்பு திட்டத்தை வைத்தே.. ஈஸியா ரூ.1.5 லட்சம் வரை பெறலாம்.. ரொம்ப ஈஸி.. எப்படி தெரியுமா?
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டம் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் (SSY) செய்யப்படும் முதலீடுகளுக்கு, வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், நீங்கள் ஒரு நிதி ஆண்டிற்கு ₹1.5 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம். மேலும் பெறப்படும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய இரண்டுக்கும் வரி விலக்கு உண்டு.
பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். SSY இல் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். அதேபோல் SSY கணக்கில் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதிர்வின் போது நீங்கள் பெறும் முதிர்வு தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும். செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு இதே வட்டி விகிதம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் தற்போது 8.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 21 ஆண்டுகள் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க முடியும். இந்த வட்டி இப்போதைக்கு குறைக்கப்படாது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து குறைந்த சேமிப்பு ஆனால் நிறைய வருமானம் வரும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் நிறைய லாபம் வட்டி மூலம் கிடைப்பதால் பெற்றோர்கள் பலரும் இதை விரும்புகின்றனர். இதனால் அதிக அளவில் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.
எப்படி சேமிப்பது?
10 வயதுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் பெயரில் திட்டத்தை தொடங்கலாம். பெண் குழந்தைகள் வயது 10ஐ கடந்ததும் அவர்கள் பெயருக்கு திட்டத்தை மாற்றிக்கொள்ள முடியும். 15 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் டெபாசிட் செய்ய முடியும். 21 ஆண்டுகளுக்கு பின் டெபாசிட்டை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். 2 ஆயிரம் ரூபாய் முதலீடும் செய்ய முடியும். இந்த சேமிப்பு திட்டத்தில் 8 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் நீங்கள் 2 ஆயிரம் ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11.16 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
விலக்கு எப்படி பெறலாம்
பழைய வருமான வரி பிரிவில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிகான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார்.
பட்ஜெட் அறிவிப்பின் படி, ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை. பழைய வருமான வரி முறையை பின்பற்ற போகிறீர்கள்.. அதை அடிப்படையாக வைத்து ஏப்ரல் 1க்கு பின் ITR தாக்கல் செய்ய போகிறீர்கள் என்றால்.. உங்களுக்காக பல சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன - ELSS பரஸ்பர நிதிகள், PPF, EPF, NSC, வரி-சேமிப்பு FDகள் மற்றும் பல திட்டங்கள் உள்ளன. அவை பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கு பலன்களை உங்களுக்கு வழங்கும். இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பலன்களைப் பெறலாம். இதை கணக்கு காட்டி ITRல் பல விலக்குகளை பெற முடியும்.
பணம் கிடைக்காமல் போகலாம்
ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விடும் வாய்ப்புகள் உள்ளன. ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் பலர் இப்படி செய்வது இல்லை இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படுவது இல்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ரீபண்ட் சென்றுவிடும்.
முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரியை திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
கவனமாக வரி செலுத்துங்கள்
அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அரசியல்கட்சிகளுக்கு நிதி அளிக்கும் 80ஜிசிசி பிரிவில் கீழ் விலக்கு பெற்றவர்கள் அதற்கான சான்றை வழங்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பலர் இதை பயன்படுத்தி விலங்குகளை பெற்ற நிலையில் அரசு இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.
வரி விலக்கு மேல் விலக்கு
ஒருவேளை நீங்கள் 80C ஐ முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால், மேலும் வருமான வரி விலங்குகளை பெற விரும்பினால் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் விலக்கு விருப்பத்தைப் பெற NPSக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது தேசிய பென்ஷன் சிஸ்டத்தில் முதலீடு செய்வது.












Click it and Unblock the Notifications