எப்படி முதலீடு செய்யலாம்னு டவுட் இருக்கா.. இதை மட்டும் செய்யுங்கள் போதும்.. எல்லா குழப்பமும் தீரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக முதலீடுகள் என்று வந்தாலே அனைவருக்கும் குழப்பம் வந்துவிடும். ஆனால் ஒரு முதலீட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பிரபல பொருளாதார வல்லுநர் பிரபல பொருளாதார கே ராஜேஷ் விளக்கியுள்ளார்.

அனைவருக்கும் எளிமையாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும்.. பணம் சம்பாதிக்க இருக்கும் முக்கியமான முறைகளில் ஒன்று முதலீடு.. ஆனால், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும்.

 How to make a better investment economic expert Rajesh explained

முதலீடுகள்: இது குறித்து பிரபல பொருளாதார கே ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் சில முக்கிய கருத்துகளை பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "முதலில், உங்களுக்கு தேவை, ஒரு டீமேட் கணக்கு. Demat கணக்கு இல்லாதவர்கள், அதை முதலில் தொடங்கிக் கொள்ளலாம்.புதுயுக செயலிகளில் தயவு செய்து தொடங்க வேண்டாம். அவற்றை நம்ப முடியாது என்பதே அதற்கு காரணம்.

இப்போ விஷயத்துக்கு வருவோம்: முதலீட்டு முடிவை எடுக்க, நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை மூன்று விஷயங்கள். Asset Allocation, உங்களுடைய குறுகிய கால மற்றும் நீண்டகால தேவைகள், அதற்கு எவ்வளவு பணம் தேவை என்கிற தகவல். உங்களது risk appetite - அதாவது, உங்களால் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்கிற தகவல். முதலீடு செய்வதற்கு முன்னர், நீங்கள் உடைக்கவேண்டிய நம்பிக்கைகளில் ஒன்று - "ரிஸ்க் இல்லாத முதலீடு".

ரிஸ்க்: முதலீடு என்றாலே ரிஸ்க் உண்டு. அது எந்த முதலீடாக இருந்தாலும் சரி. அரசு பத்திரங்களில் முதலீடு செய்தாலும், பணவீக்கம் என்கிற ரிஸ்க் அதில் உண்டு. பங்குச் சந்தை முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை, ஏனென்றால், சந்தையை எப்போதும் கணிக்க முடியாதது மற்றும் எந்த முதலீடும் ஆபத்து இல்லாதது இல்லை. இதனை ஆழமாக மனதில் பதித்துக்கொண்டு மேற்கொண்டு படிக்கவும்.

Asset Allocation என்று ஒன்று இருக்கிறது. அதில் "100 minus age rule" என்கிற ஒரு முறை இருக்கின்றது. அதாவது, உங்களுடைய மொத்த முதலீட்டில், பங்குகள் (ரிஸ்க் உடையது) எவ்வளவு சதவிகிதம் இருக்க வேண்டும் என்பதை குறிக்கும் ஒரு முறை. உதாரணமாக, உங்களுடைய வயது 30 என்று வைத்துக்கொண்டால், 100-30 = 60% பங்குகளில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 30% முதலீட்டை, ரிஸ்க் குறைவாக கொண்ட டெபிட் கருவிகளில் முதலீடு செய்யலாம். இதுதான் கணக்கு.

உங்களுடைய குறுகிய கால மற்றும் நீண்டகால தேவைகள், அதற்கு எவ்வளவு பணம் தேவை? எந்தவொரு விஷயத்தை செய்தாலும், அதற்கொரு டார்கெட் வேண்டும். அப்பொழுது தான் அந்த விஷயத்திற்கு உங்களால் திட்டமிட முடியும்.

தேவைகள்: உங்கள் வாழக்கைக்கான குறுகிய கால தேவைகள் (வாகனம்/நகை/electronics/பள்ளி அல்லது கல்லூரி கட்டணம் போன்றவை) மற்றும் நீண்டகால தேவைகள் (வீடு வாங்குவது/மகன் அல்லது மகளின் படிப்பு செலவு மற்றும் தீர்மான செலவு/உங்களது ஓய்வுகால தேவை போன்றவை). என்னவென்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தேவைக்கும் எவ்வளவு பணம் தேவை என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது risk appetite.. நீங்கள் ரிஸ்க் எடுப்பதில் எந்த வகையை சார்ந்தவர் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதற்கு, இணைக்கப்பட்டுள்ள முதல் படம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். பயன்படுத்திக் கொள்ளவும். சரி. மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் கிடைக்கப் பெற்ற பின்னர் என்ன செய்ய வேண்டும்?

ரிஸ்க் முடியுமா: Risk Appetite ல் உங்களுக்கு வந்த பதில் படி, பங்குகளோ/ மியூச்சுவல் பண்டுகள்/ கடன் பத்திரங்களையோ முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். "ஆசையே அலைபோலே, நாமெல்லாம் அதன்மேலே" என்று ஒரு பாடல் இருக்கின்றது. என்னதான் நாம் targets நிறைய வைத்திருந்தாலும், அதனை அடைய நாம்தான் முதலீடு செய்ய வேண்டும். நாம் நிர்ணயம் செய்யும் டார்கெட்கள் அடைய கூடியதாக இருக்க வேண்டும். தற்போது உங்களால் செய்ய முடிகிற முதலீட்டில், குறிப்பிட்ட காலகட்டத்தில், உங்களால் அந்த டார்கெட் அடைய முடியுமா என்பதை கண்டறியுங்கள். இதற்காக சிப் தொகை கணக்கீடு செய்வது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

டார்கெட் முக்கியமானது. .'என்னுடைய டார்கெட் என்னால் மாற்ற முடியாது' என்றால், அந்த டார்கெட் அடைவதற்கு எவ்வளவு பணம் தற்போது நீங்கள் முதலீடு செய்யவேண்டுமென்பதை சிப் கணக்கிடும் கருவிகள் துணை கொண்டு கண்டறியுங்கள். அந்த பணத்தை உங்களால் தற்போது முதலீடு செய்ய முடியவில்லையென்றால், அந்த பணத்தை எவ்வாறு அடைவது என்பதை முடிவு செய்யுங்கள்.. செலவுகளை குறைக்கலாம்.. வருமானத்தை அதிகரிக்கலாம்..

'மாதா மாதம் என்னால் இவ்வளவு தான் முதலீடு செய்ய முடியும். அதை மாற்ற முடியாது' என்றால், இந்த முதலீட்டில், உங்களால் எத்தனை டார்கெட் அடைய முடியுமென்பதை கண்டறிந்து, மற்றவைகளை மறந்துவிடுங்கள். மேற்சொன்ன அனைத்தையும் முடிவு செய்த பிறகு, உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறியுங்கள். கூகுள் மூலமாகவோ அல்லது முதலீட்டு ஆலோசர்கள் மூலமாகவோ உங்களுக்கு இந்த தகவல் கிடைக்கும்.

கிடைத்த முதலீட்டு வாய்ப்புகளில் சிறந்தது எது என்கிற கேள்வி எழலாம். சரியான கேள்விதான். பதில்: பங்குகள் என்று எடுத்துக்கொண்டால், முதலில் உங்கள் risk appetiteக்கு ஏற்றாற்போல் நிறுவனங்களை தெரிவு செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் அந்த நிறுவனத்தின் அடிப்படை நன்றாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். செவி வழி செய்தி, சமூக வளைதளங்களில் எடுக்கப்படும் வாந்திகள், இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது. நீங்கள் ஆராய்ச்சி செய்து, முடிவெடுக்க வேண்டும்.

பிரித்து முதலீடு செய்யணும்: முதலீடு என்று எடுத்துக்கொண்டால், "Dont put all your eggs in the same basket" என்றொரு சொலவடை உண்டு. உங்கள் முதலீட்டை 4/5 ஆக பிரித்து, நல்ல நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். ஒரே துறையில் (IT/FMCG/Real Estate/Pharma..etc) முதலீடு செய்யக் கூடாது. பிரித்து செய்து முதலீடு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் பண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், முதலில் உங்கள் risk appetite க்கு ஏற்றாற்போல் மியூச்சுவல் பண்டுககளை தேர்வு செய்ய வேண்டும். செபியின் உத்தரவுப்படி, ஒவ்வொரு மியூச்சுவல் பண்டுகளும்ம் தங்களது பண்டுகள் எந்த ரிஸ்க் வகையை சார்ந்தது என்பதை "Risk-o-Meter" என்கிற தகவலை முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது படத்தில் உள்ளது போல் இருக்கும். அதை வைத்து, உங்களுக்கு தேவையான பண்டுகளை தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

கவனிக்க வேண்டியது: மியூச்சுவல் பண்டுகள் தேர்வு செய்கையில் நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய மற்ற தகவல்கள். கடந்த காலத்தில் அது எந்தளவுக்கு லாபம் கொடுத்துள்ளது? தொடங்கியதிலிருந்து, அந்த fund எவ்வளவு வருமானம் கொடுத்துள்ளது? அதேநேரம் இதை மட்டுமே வைத்து பண்டுகளை க்களை தேர்வு செய்வது மிகவும் ஆபத்தானது. "கடந்த காலம் அவை கொடுத்த லாபத்தை வைத்து வரும்காலம் இவ்வளவு லாபம் வரும் என்பதை உறுதியாக கூற முடியாது. நினைவில் வைத்துக் கொள்க.

பண்டு மேனேஜர்.. அவர் இந்த பண்டுயை இவ்வாறு நிர்வகிக்கிறார். இதற்க்கு முன்னர் அவர் என்ன பண்டுகளை நிர்வகித்தார், அதனுடைய வருமானம் என்ன? தற்போது அவர் நிர்வகிக்கும் வேறு சில பண்டுகள் எப்படி உள்ளது? நீங்கள் வாங்கும் பண்டுகள் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அவை நல்ல நிறுவனங்களா? பாதுகாப்பானதா என்பதையும் பார்க்க வேண்டும். இன்டெக்ஸ் உடன் ஒப்பிடும் போது , அதன் பர்பான்ஸ் நன்றாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

கஷ்டம் தான்: என்ன? இப்போவே கண்ண கட்டுதா? இது முதலீடுப்பா. அப்படிதான் இருக்கும். இது எல்லாதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, உங்கள் முதலீட்டை நீங்கள் தொடங்கலாம். முதலீடு செய்து விட்டு ஒவ்வொரு நாளும் அதனை பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்தால் செய்தால் போதுமானது.

அதேபோல், நீங்கள் நிறைய நிறுவனங்கள்/ பண்டுகளை முதலீடு செய்து இருந்தால், அவை அனைத்தும் நன்றாக லாபம் தரும் செய்யும் என்கிற எதிர்பார்ப்பையும் விட்டுவிடுங்கள். உங்களது மொத்த போர்ட்போலியோ வின் பராபான்ஸை மட்டுமே பார்த்தால் போதுமானது. நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வருகிறதா, அந்த வருமானம் பணவீக்கத்தை தாண்டிய வருமானமாக இருகின்றதா என்பதை மற்றும் பார்த்தால் போதும்" என்று தெரிவித்துள்ளார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+