அமெரிக்க இந்தியர்களுக்கு மட்டுமல்ல.. இந்தியாவில் உள்ளவர்களின் வேலைகளுக்கும்.. ஆப்பு வைத்த டிரம்ப்
சென்னை: அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வேலைவாய்ப்பு குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளார் . இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.அதன் ஒரு கட்டமாக அமெரிக்க ராணுவ விமானம், அமெரிக்காவில் உள்ள 11 மில்லியன் ஆவணமற்ற குடியேறிகளை வெளியேற்ற தொடங்கி உள்ளது.

வேலை போகிறது:
1. அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் இதனால் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது.
2. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. அடுத்த சில நாட்களில் டெக்சாஸின் எல் பாசோ மற்றும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்படுவார்கள் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
4. இதுவரை, ராணுவ விமானங்கள் மூலம் குவாட்டமாலா, பெரு மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்போது இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
5. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,407 இந்தியர்களை அமெரிக்கா அடையாளம் கண்டுள்ளது.
6. இவர்களில், 17,940 பேர் முறையான ஆவணங்களற்ற நபர்கள் என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) தெரிவித்துள்ளது. 2,467 பேர் தற்போது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் (ICE) பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த புள்ளிவிவரங்கள் கடைசியாக 2022 இல் புதுப்பிக்கப்பட்டன. அடுத்த சில மாதங்களில் இது மீண்டும் புதுப்பிக்கப்படலாம் என்பதால்.. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உயரலாம்.
இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கும் சிக்கல்
அமெரிக்க அதிபரின் நடவடிக்கையால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வேலைவாய்ப்பு குறைய தொடங்கி உள்ளது. இந்தியாவில் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
1. இந்தியாவில் அமெரிக்கா நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை டிரம்ப் விரும்பவில்லை.
2. அமெரிக்காவிற்கு வெளியே அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை தயாரிப்பதை தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறாராம். அதாவது அமெரிக்காவின் டெஸ்லா, ஆப்பிள் ஐபோன், கார் நிறுவனங்களை வெளிநாடுகளில் உற்பத்தி செய்வதை டிரம்ப் விரும்பவில்லையாம்.
3. இதற்காக அமெரிக்க நிறுவனங்களின் பொருட்களை தயாரிப்பதை மொத்தமாக நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறாராம். இதில் ஆப்பிள் நிறுவனமும், டெஸ்லா நிறுவனமும்தான் கட்டுப்பாடுகளுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. முதலில் ஆப்பிள் நிறுவனத்தைதான் அமெரிக்காவிற்குள் மீண்டும் கொண்டு வர டிரம்ப் முயன்று வருகிறாராம். ஆப்பிள் நிறுவனம் தைவான் நிறுவனங்களின் ஒப்பந்தம் மூலம் தைவான், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்கிறது. இந்த உற்பத்தி டிரம்ப் செயலால் பாதிக்கப்படலாம். முக்கியமாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்படலாம்.
5. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் பல இந்தியாவை விட்டு வெளியேறலாம். இதனால் இந்தியாவிலும் பணி வாய்ப்புகள் குறையும் வாய்ப்புகள் உள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications