நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு! புதிய சிக்கலில் நயன்-விக்கி! மனித உரிமைகள் ஆணையத்தில் திடீர் வழக்கு
சென்னை : நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தின் போது பொது இடமான கடற்கரைக்கு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என என தொடரப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் விக்கி - நயன்தாரா இருவருமே இதுகுறித்து பதிலளிக்காமல் வந்தனர்

நடிகை நயன்தாரா
இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம்'' எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது.

முதல் சர்ச்சை
தமிழ்நாடே வியக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் . இதனை அடுத்து திருமணம் முடிந்த அடுத்த நாள் திருப்பதிக்குச் சென்று நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது நயன்தாரா செருப்பு அணிந்து சென்ற விவகாரம் சரியான நிலையில் விக்னேஸ்வரன் இதற்காக மன்னிப்பு கேட்டதுதையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

கடும் கட்டுப்பாடுகள்
திருமணத்தின் போது மகாபலிபுரம் கடற்கரை பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. திருமணம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது புகைப்படம் எடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சாதாரண பொதுமக்கள் மகாபலிபுரம் கடற்கரை செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
இப்படி கடும் கட்டுப்பாடுகளோடு நடைபெற்ற திருமணம் தற்போது வேறு ஒரு சிக்கலில் சிக்கி உள்ளது . அதாவது கடற்கரை என்பது பொதுவான இடம் என்பதால் திருமணத்தின் காரணமாக அங்கு ஏன் பொதுமக்களை அனுமதிக்கவில்லை எனவும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்புக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications