பார்க்க ரொம்ப அழகு.. உடம்பெல்லாம் டாட்டூ.. அதை கேட்க போய் சண்டை... கத்தியை எடுத்து குத்திய கணவர்!
சென்னை: "பார்க்க ரொம்ப அழகா இருப்பாள்.. உடம்பெல்லாம் டாட்டூ குத்தி இருக்காள்.. அதை பத்தி கேட்க போய்தான் சண்டை வந்துவிட்டது.. ராத்திரியெல்லாம் விடிய விடிய சண்டை போட்டோம்.. அப்பறம் கத்தி எடுத்து குத்திவிட்டேன்" என்று மனைவியை கொன்ற கணவன் வாக்குமூலம் தந்துள்ளார்.
புழல் பகுதியில் வசித்து வருபவர் வெற்றிவீரன். பாடியில் ஒரு தனியார் அச்சகத்தில் வேலை பார்க்கிறார்.. இவருக்கு சஜினி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.
சஜினிக்கு 38 வயதாகிறது... சஜினி ஒரு பியூட்டிஷன்.. ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை.. நாளடைவில் சிதைய தொடங்கியது.. வெற்றிவீரனுக்கு ஏகப்பட்ட சந்தேகம் குடிகொண்டது.. இது சம்பந்தமாகவே நிறைய முறை சண்டை வந்துள்ளது.

சமாதானம்
ஒரு கட்டத்தில் கணவரை விட்டு சஜினி பிரிந்து சென்றுள்ளார்.. ஆனால், அப்போது உடம்பில் டாட்டூ போட்டு கொண்டுள்ளார் சஜினி.. சிறிது நாளில் மீண்டும் இருவரும் சமாதானம் ஆன சமயம்தான், மனைவி உடம்பில் டாட்டூ இருந்ததை பார்த்து வெற்றிவீரன் ஆத்திரம் அடைந்தார். திரும்பவும் சண்டை.. திரும்பவும் சஜினி பிரிந்து போக.. சில தினங்களுக்கு முன்புதான் சமாதானம் செய்து வெற்றிவீரன் அழைத்து வந்திருக்கிறார்!

தகராறு
இந்த சமயத்தில்தான் மகள்கள் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.. வெற்றிவீரனும் சஜினியும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். நேற்றிரவு வழக்கம்போல தகராறு வந்துவிட்டது.. விடிய விடிய சண்டை போட்டுள்ளனர் 2 பேரும்.. விடிகாலை 5 மணி வரைக்கும் சண்டை நிற்கவே இல்லை.

வெற்றிவீரன்
5 மணிக்கு பிறகு, கிச்சனில் இருந்து கத்தியை எடுத்து வந்து சஜினியை தாறுமாறாக குத்தினார் வெற்றிவீரன்.. சஜினியின் கழுத்து, வயிறு, மார்பில் பலமுறை குத்தி கிழித்தார்.. இதில் சஜினி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதை பார்த்து கதறிய வெற்றிவேலன் நேராக புழல் போலீசில் போய் சரண் அடைந்தார். இதைக் கேட்டு அதிர்ந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டனர்.. பக்கத்திலேயே கிடநத் ரத்தக்கறை படிந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

வாக்குமூலம்
இந்த கொலை குறித்து போலீசாரிடம் வெற்றிவீரன் தந்த வாக்குமூலத்தில், "சஜினி பாக்க ரொம்ப அழகா இருப்பாள்.. சொந்த ஊரு கேரளா.. லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. ஒருமுறை சண்டை போட்டுட்டு என்னை விட்டு போய்ட்டாள்.. அப்போ, உடம்பில் டாட்டூ போட்டுக்கிட்டாள்.. அதை பத்தி இப்போ விசாரிச்சதாலதான் எங்களுக்குள்ள சண்டை வந்தது" என்றார்.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications