காங்கிரஸ் கட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்... அமித்ஷாவிற்கு வாழ்த்து சொன்னது தவறா? - குஷ்பு

காங்கிரஸ் கட்சியில் மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகை குஷ்பு கூறியுள்ளார். 2 ரூபாய் வாங்கிக்கொண்டு ட்விட்டரில் தன்னைப்பற்றி வதந்தி பரப்புவதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனது டெல்லி பயணத்தை இவ்வளவு பெரிதாக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். ஒரு ட்வீட்டிற்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு தன்னைப்பற்றி வதந்தி பரப்புவதாகவும் கூறியுள்ளார் குஷ்பு.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு பாஜகவில் இணையப்போவதாக செய்தி பரவியது. தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்பதால் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனையடுத்து விரைவில் பாஜகவில் சேரப்போவதாகவும் தகவல் வெளியானது.

I am happy in the Congress party says Khushbu

புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தால் காங்கிரஸ் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் கொரோனா தொற்றுக்கு ஆளான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடையவேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தார் குஷ்பு. இதையெல்லாம் சேர்த்து வைத்து குஷ்பு விரைவில் பாஜகவில் இணையப்போவதாக வதந்தி பரவியது. தமிழக பாஜக தலைவர் எல். முருகனை சந்தித்து பேசியதாகவும் வதந்திகள் உலா வந்தன.

I am happy in the Congress party says Khushbu

இந்த வதந்தியை குஷ்புவோ, பாஜக மேலிடமோ மறுக்கவிலை. இந்த நிலையில்தான் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற அறவழி போராட்டத்தில் பங்கேற்று பேசிய குஷ்பு பாஜக அரசுக்கு எதிராக பேசி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் இன்று திடீரென டெல்லி சென்றுள்ளார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் 9 மாதங்களுக்கு பிறகு வெளியூர் பயணம் செல்வதாக, தனது ட்விட்டர் பக்‍கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் பாஜகவில் இணைவது உறுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசியுள்ள குஷ்பு, தனது டெல்லி பயணம் இத்தனை பரபரப்பை ஏற்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் வேறு கட்சிக்கு போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

அமித்ஷா இந்த நாட்டுக்கே அமைச்சர் கட்சிக்கு அப்பாற்பட்டு அவருக்கு வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்துள்ளார் குஷ்பு. ஒரு ட்வீட்டிற்கு 2 ரூபாய் வாங்கிக்கொண்டு வதந்தி பரப்புவதாகவும் குஷ்பு காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+