கடவுள் இருக்கிறார்.. எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவருக்குதெரியும்.. எஸ்.வி. சேகர் பளிச் !
சென்னை: நான் யாரை பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை. எனக்கு என்ன தேவையோ அதை இறைவன் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
Recommended Video
நடிகரும், முன்னாள் எம்எல்ஏவும், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவருமான எஸ்.வி.சேகர் கொடுத்த பேட்டியின் தொடர்ச்சியை இப்போது காணலாம்:

எல் முருகன்
கே: மத்திய அமைச்சராகியுள்ள எல் முருகனால் தமிழகத்திற்கு என்ன பயன்?
ப: அவர் என்ன செய்வார் என தெரியவில்லை. மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா என கேட்கிறீர்கள். மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து எந்த மீனவரும் சுடப்படவில்லை. இது ஏன் நடக்கிறது என்றால் இந்திய கடல் எல்லையில் மீன்கள் குறைவு, மீனவர்கள் அதிகம்.
இலங்கை கடற்பரப்பில் மீன்வர்கள் குறைவு, மீன்கள் அதிகம். இரட்டை வலை, மடி வலையை பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு சட்டம் இருக்கிறது. சர்வதேச எல்லையை தாண்டியது அது சட்டவிரோதம். இந்த எல்லையை தெரிந்து கொள்ள மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மோடி அரசில் இதுவரை மீனவர்கள் சுடப்பட்டார்கள், இறந்தார்கள் என ஒரு சம்பவமும் நடந்ததில்லை.
எனவே இதையெல்லாம் எல் முருகன் பார்த்துக் கொள்வார். என்னை மதித்து எனக்கு அங்கீகாரம் கொடுத்தால் நான் ஐடியா கொடுப்பேன்.

70 வயதிலும்
கே : 70 வயதிலும் எனர்ஜிட்டிக்காக இருக்கிறீர்கள், அதற்கு என்ன காரணம்?
ப: நான் யாரை பார்த்தும் பொறாமைப்பட்டதில்லை. எனக்கு என்ன தேவையோ அதை இறைவன் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இரு வகைகளாக வாழலாம். ஒன்று நாம் சம்பாதிக்கும் பணத்திற்குள் வாழ்க்கையை நடத்த வேண்டும்.
இல்லாவிட்டால் நாம் வாழ நினைக்கும் அளவிற்கு சம்பாதித்யத்தை நேர்மையாக அதிகரிக்க வேண்டும். நாடகம் நடிப்பதில் வரும் பணத்தை வைத்துக் கொண்டு என்னுடன் நடிக்கும் நாடக நடிகர்களுக்கு உதவி வருகிறேன். எனது டிராமா குழுவே ஒரு அறக்கட்டளைதான்.

தலைவர்கள் குறித்து ஒரு வரி விளக்கம்
கே: தலைவர்கள் குறித்து ஒரு வரியில் விளக்கம்
ப: முன்னாள் முதல்வர் கருணாநிதி - அன்பானவர்
ஜெயலலிதா- ஆளுமையானவர்
பிரதமர் மோடி - தைரியமானவர்
கமல்ஹாசன்- கமல் என்றாலே குழப்பம், சரியான திசையை நோக்கி பயணிக்க முயற்சிப்பர்
ரஜினிகாந்த்- சிக்கல் இல்லாமல் வாழ தெரிந்தவர், சிக்கல் இல்லாமல் தப்பிக்க தெரிந்தவர்
சீமான்- அரசியல் ஆமை
அன்புமணி ராமதாஸ்- அட்வான்ஸ் பட்ஜெட்
எடப்பாடி பழனிச்சாமி- நிரந்தர முதல்வர் இடத்திற்கு போராடிக் கொண்டிருப்பவர்
சசிகலா- சைக்கிள் கேப்பில் கார் ஓட்ட முயற்சிப்பர்
வானதி ஸ்ரீனிவாசன்- தமிழக பாஜக எம்எல்ஏ
எச் ராஜா- எம்எல்ஏ பதவியை தவறிவிட்டவர்
ஓபிஎஸ்- மிக நல்ல நண்பர்
சோ- எனது மானசீக குரு
பாலசந்தர்- எனது திரைப்பட குரு

நற்காரியங்கள்
எஸ் வி சேகர் செய்யும் உதவிகள்: ஆண்டுக்கு சுமார் 100 மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். ஆண்டுக்கு 200 பேருக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறார். ரத்த தானம் செய்து வருகிறார். ஆதரவற்ற சடலங்களை அரசு மருத்துவமனைகளில் இருந்து கொண்டு வந்து அடக்கம் செய்யும் பணிகளை அறக்கட்டளை மூலம் நிகழ்த்துகிறார். இவரது அறக்கட்டளைக்கு யாரேனும் உதவ முன்வந்தால் [email protected] என்ற ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications