பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு..வன்முறையை கையில் எடுக்கக்கூடிய கட்சியல்ல பாஜக.. அண்ணாமலை கருத்து!
சென்னை: வன்முறையை கையில் எடுக்கக் கூடிய கட்சியை நடத்தவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உயிரிழந்தார். இவரது உடல் இரு நாட்களுக்கு பின் மதுரை கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையம் வந்த லட்சுமணின் உடலுக்கு, தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார்.

பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு
இதனிடையே அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னர், பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் பழனிவேல் தியாகராஜன் புறப்பட்டர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எரிந்துள்ளார்.

பாஜகவினர் கைது
இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். தமிழக அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது தமிழக அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர், பாஜகவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.

கைதானவர்கள் விவரம்
அதில் மதுரை பாஜக மாவட்ட துணைத் தலைவர் மார்க்கெட் குமார், பாலா, திருச்சியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, கோபிநாத் மற்றொரு கோபிநாத் என 5 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிடிஆர் மீது புகார்
அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் ஆகியோரை அவதூறாக பேசியதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது பாஜக சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சரின் கார் செருப்பு வீசியது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

அண்ணாமலை கருத்து
அதில், நான் வன்முறையை கையில் எடுக்கக் கூடிய கட்சியை நடத்தவில்லை. தொண்டர்கள் யாருக்கும் வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப் போவதும் கிடையாது. நமது கட்சி ஆழமான தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்கக் கூடிய கட்சி பாஜக என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications