நான் மோடியின் ரசிகன்.. அவரை பிடிக்கும்.. பாஜகவில் சேர்ந்தது ஏன்? அண்ணாமலை சொன்ன விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு மோடியை மிகவும் பிடிக்கும், நான் அவரின் ரசிகன், தமிழகத்தில் பாஜகவை வளர்த்து எடுக்க நான் உதவுவேன் என்று அக்கட்சியில் இன்று இணைந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    பாஜகவில் இணைந்த முன்னாள் IPS அண்ணாமலை

    பாஜக கட்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று இணைந்தது பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்கு நெருக்கமான இவர், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தன்னை கன்னடிகா என்று வெளிப்படையாக பல இடங்களில் அறிவித்தவர்.

    அரசியலில் குதிப்பதற்காக கடந்த வருடம் தனது பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை, இன்று பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளர் இவர் என்றும் கூட தகவல்கள் வர தொடங்கி உள்ளது .

    பேட்டி அளித்தார்

    பேட்டி அளித்தார்

    இந்த நிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி வழிநடத்துதலில் பா.ஜ.கவுக்காக உழைப்பேன். தொண்டனாகவே கட்சிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறேன். நான் ஒரு தேசியவாதி, மனதளவில் நான் ஒரு ஒரு மோடியின் அபிமானி. பாஜகவில் மட்டுமே ஜனநாயகம் இருக்கிறது, அதனால் பாஜகவில் இணைந்தேன்.

    மக்கள் சேவை

    மக்கள் சேவை

    மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். பாஜக என்னுடைய முதல் தேர்வாக இருந்தது. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்து எடுக்க உதவுவேன். தமிழகத்தின் திசையை மாற்றி நல்ல வழியில் கொண்டு செல்ல பாஜகவால் மட்டுமே முடியு. எனக்கு மோடியை மிகவும் பிடிக்கும், நான் அவரின் ரசிகன். சாதாரண ஒரு குடிமகனும் கூட பிரதமராக முடியும் என்று நிரூபித்தவர் மோடி.

    உச்சத்தை தொட்டவர்

    உச்சத்தை தொட்டவர்

    சாதாரண நபர் உச்சத்தை தொட முடியும் என்று நிரூபித்தவர் மோடி. அவருக்கு குடும்ப அரசியல் பின்புலம் இல்லை. அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, மோடி ஊழல் செய்தது இல்லை. தமிழகத்தில் பாஜகவை பற்றி தவறாக கருத்துக்களை பரப்புகிறார்கள்.

    பாஜக தமிழகம்

    பாஜக தமிழகம்

    அதை மாற்றும் வகையில் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். தமிழக அரசியலில் வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் பாஜகவில் மட்டுமே அது இல்லை. அதனால் பாஜகவில் நான் இணைந்தேன், என்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+