டாக்டர் ஆகனும் தான் ஆசைப்பட்டேன்..ஆனால் அது நடக்கவில்லை.. நினைவுகளை பகிர்ந்த டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை: எனக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக 4 ஆண்டுகள் முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் அது நிறைவேறாமல் போய் விட்டது என்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு பேசினார்.
தமிழ டிஜிபி சைலேந்திர பாபு காவல்துறை உயர் அதிகாரி என்பதையும் தாண்டி, இளைஞர்கள் நலன் மற்றும் அவர்களின் எதிர்கால வழிகாட்டுதல்களில் மிகுந்த அக்கறை காட்டுபவராக அறியப்படுபவர்.
இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை ஊட்டும் உரைகள் மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கி வரும் சைலேந்திரபாபு உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருபவர்.

கருத்தரங்கு, பயிற்சி முகாம்
தனது சமூக வலைத்தளங்களில் வேலைப்பளுவுக்கு மத்தியில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு உள்ளிட்டவற்றையும் அவ்வப்போதும், தற்போதும் பகிர்ந்து வருகிறார். பல இளைஞர்களின் ரோல் மாடலாகவும் திகழும் டிஜிபி சைலேந்திர பாபு தான் படிக்கும் போது டாக்டர் ஆக ஆசைப்பட்டதாக கூறியிருக்கிறார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

டிஜிபி சைலேந்திர பாபு
இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டார். கருத்தரங்கை தொடங்கி வைத்த பிறகு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை சார்பில் காவல்துறையினருக்கு முதுகுவலி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டு இருக்கும்ம் புதிய பிரிவையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாவது:-

டாக்டர் ஆக ஆசைப்பட்டேன்
மருத்துவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் பொதுமக்கள் நலமுடன் வாழ முடியும். உண்மையான சேவை மனப்பான்மையை கொண்ட மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ளனர். எனக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக 4 ஆண்டுகள் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்று நினப்பது ஆரோக்கியமான விஷயம் ஆகும்.

முதுகு வலி சிகிச்சை
காவல்துறை வேலையில் உடல் உழைப்பு பொதுவாகவே அதிகம் உண்டு. இதனால், காவல்துறையினருக்கு முதுகு வலி, உடல் வலி ஏற்படும். சென்னையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் பணியில் இருக்கின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ,மூன்றாவது திங்கள் கிழமைகளில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள முதுகு வலி சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது மகிழ்ச்சி அளிக்கக் கூடிய செய்தியாகும். இந்த வசதியை அனைத்து காவலர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வச்திகளுடன் 5 ஆயிரம் பேர் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. நேர்மையான அரசு ஊழியர்களுக்கான புகலிடம் அரசு மருத்துவமனை. அண்மையில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது" என்றார்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications