சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

'அ.தி.மு.க வினரை தொட்டால் கையை ஒடிப்பேன்'.. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபர பேச்சு!

Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட தலைநகரங்களில் நடந்த போராட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாப்ஃடர் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி.. பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது! சாப்ஃடர் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி.. பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது!

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும், பொங்கல் பரிசுத்தொகையை அறிவிக்க வேண்டும், குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 திட்ட வாக்குறுதி, பெட்ரோல், டீசல் விலையில் ரூபாய் 5 குறைப்பு, நீட் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

'கையை ஒடிப்பேன்'

'கையை ஒடிப்பேன்'

இதேபோல் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே முன்னாள் அமைச்சர்கள் சின்னசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சிக்காரனைத் தொட்டால் கையை ஒடிப்பேன் என்று கடுமையாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதயநிதிக்கு முக்கியத்துவம்

உதயநிதிக்கு முக்கியத்துவம்

அதிமுகவினர் மீது குட்கா, கஞ்சா, கந்துவட்டி எனபொய் வழக்குகளை போடுகின்றனர். கட்சிக்காரர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னால் நிற்பேன். அதிமுகவினரை தொட்டால் கையை ஒடிப்பேன். இந்தக் கட்டப் பஞ்சாயத்து ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார். ஜனவரியில் உதயநிதி அமைச்சர், அதன் பிறகு துணை முதல்வர், அதன் பிறகு முதல்வர் என்று பேசிய அவர் 'ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்தான் திமுகவினர் கவனம் உள்ளது என தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் வேண்டும்

ஆட்சி மாற்றம் வேண்டும்

பெண்களுக்கு மாத உதவித்தொகை ஆட்சிக்கு வந்து 7 மாதங்களாகியும் இதுவரை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் கொடுத்தவர், மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் 11.05 மணிக்கு மாட்டு வண்டிகளில் ஆற்றில் மணல் எடுக்கலாம் என்று பேசுகிறார் என கூறினார். 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் மனதில் நினைக்க வைத்துள்ளனர் என்று கூறினார்.

13 பேர் மீது வழக்குகள்

13 பேர் மீது வழக்குகள்

திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்குகள் உள்ளன. அந்தமானில் முதலீட்டு விவரங்களை மத்திய அரசு திரட்டிக்கொண்டுள்ளது. விரைவில் ஒரு அமைச்சர் கம்பி எண்ணவேண்டி இருக்கும். இந்தக் கட்டப் பஞ்சாயத்து ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

English summary
Former AIADMK minister MR Vijayabaskar has said that he will break hand if anyone touches the AIADMK party volunteers' He said the DMK was focused on giving priority to Udayanidhi after Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X