ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் பெயரில் மீண்டும் பாய்ந்த வலை.. வாட்ஸ்அப்பில் போட்டோவுடன் மெசேஜ்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனின் போட்டோவை பயன்படுத்தி, போலியான வாட்ஸ்அப் கணக்கையும் உருவாக்கி, மர்ம நபர்கள் சிலர் மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது... என்ன நடந்தது?

சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் விதவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. அதனால்தான் ஆன்லைன் வர்த்தகத்தில் கவனமாக இருக்கும்படி நம்முடைய போலீசார் அறிவுறுத்தியபடியே உள்ளனர்..

இதனால் பெரிய நஷ்டம் ஏற்படக்கூடும் என்பதால், முன்பின் தெரியாதவர்கள், அறிமுகம் இல்லாதவர்களின் செல்போன் லிங்குகளை திறக்க வேண்டாம், அதிக லாபம், உத்தரவாதம் என்றெல்லாம் சொல்லும், ஆன்லைன் வர்த்தக முதலீடுகள், போலியான வர்த்தக ஆப்கள், முன்பின் தெரியாத வாட்ஸ்அப் குரூப்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தொடர்ந்து அலர்ட் செய்து வருகிறார்கள்.

IAS Radhakrishnan

வங்கிக் கணக்குகள்

அதுமட்டுமல்ல, வங்கி கணக்குகளை தருமாறும், அதில் வரும் பணத்தை எடுத்துக் கொடுத்தால் நல்ல கமிஷன் தொகை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் சொன்னால் யாரும் தங்களது வங்கி கணக்கு விவரங்களை மோசடி நபர்களுக்கு தர வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் இணையதளத்திலும், தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை அழைக்க வேண்டும், அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுக வேண்டும் என்றும் பலமுறை அட்வைஸ் தந்தபடி உள்ளனர்..

ஆனாலும், மோசடிகள் தொடர்கின்றன.. இதனால் பல அப்பாவிகள் ஏமாந்து கொண்டேயிருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, குற்றவாளிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் போட்டோக்களை வாட்ஸ்அப் முகப்புப் படமாகப் பயன்படுத்தி போலியான கணக்குகளை உருவாக்கி, அதை வைத்தும் மோசடிகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன..

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

அந்தவகையில், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் போட்டோவையும் பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் நம்பரிலிருந்து, செய்திகள் அனுப்பப்பட்டு மோசடி செய்ய முயற்சி நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா புகைப்பட ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.. அதில், சம்பந்தப்பட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்..

பிளாக் செய்யுங்கள்

"அந்த எண்ணிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை யாரும் நம்ப வேண்டாம், அந்த எண்ணை நம்பிப் பணம் அனுப்பவோ தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம்.. அந்தப் போலி வாட்ஸ்அப் எண்ணைத் தடைசெய்யும் வகையில் பிளாக் செய்து விடுங்கள்.. மோசடி தொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ராதாகிருஷ்ணன் பெயரில், இதேபோன்ற ஒரு மோசடி சம்பவம் கடந்த 2024-லும் நடந்தது.. அப்போது சென்னை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தார் டாக்டர்.ராதாகிருஷ்ணன்.. அவரது பெயரில் வாட்ஸ்-அப் அக்கவுன்ட் உருவாக்கி, அவர் போட்டோவுடன் போலியான மொபைல் எண்ணிலிருந்து பணம் கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டது.

போலி கணக்குகள் - மோசடிகள்

ஆனால், இதுகுறித்து ராதாகிருஷ்ணன் உடனடியாக பொதுமக்களை அலர்ட் செய்தார்.. "இது என்னுடைய தொலைபேசி எண் அல்ல. பணம் பறிக்கும் போலி வாட்ஸ்-அப் கணக்கு. இதில் நேரத்தை வீணாக்க வேண்டாம், இந்த அக்கவுன்ட்டை பிளாக் & ரிப்போர்ட் செய்யவும். (This is not my phone number. Fake wahtsapp account seeking money. Do not entertain and block and also report. I have also reported to police.)" என்று தெரிவித்திருந்தார்.. அத்துடன் இது சம்பந்தமாக போலீசிலும் புகார் தந்திருந்தார்.

ஏற்கனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களிலும் போட்டோக்களிலும் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டு மோசடி முயற்சிகள் நடைபெற்ற நிலையில், இப்போது மீண்டும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பெயரிலும் போலியான வாட்ஸ்அப் கணக்கு மூலம் மோசடி செய்ய முயற்சி நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+