தமிழ்நாடு பெயரை மறைக்க நினைக்கிறார்.. ஆளுநரை திரும்பப் பெறாவிட்டால்.. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை!
சென்னை: ஆளுநர் திட்டமிட்டு தமிழ்நாடு என்ற பெயரை மறைக்க நினைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால், போராட்டம் தீவிரமடையும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத்த்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார்.
இதற்கு சட்டசபையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு, தீர்மானமும் கொண்டு வந்தார். இதனால் சட்டசபையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் மாளிகை முற்றுகை
இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பெரும்திரளானோர் கலந்துகொண்டனர். சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகையிட முயன்ற நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.

பாலகிருஷ்ணன் பேட்டி
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பாலகிருஷ்ணன் கூறுகையில், ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தின்படி நடந்துகொள்ள வேண்டும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசியலமைப்பில் எழுதி இருக்கக்கூடிய நிலையில், இந்த ஆளுநர் மதச்சார்பற்ற நாடே இல்லை என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

ஆன்லைன் ரம்மி
ஒருவேளை மசோதாக்களுக்கு ஒப்புதல் இல்லையென்றால் திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது அரசிடம் திருத்தம் கேட்க வேண்டும். அதைச் செய்யாமல் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல குடும்பங்களில் உயிர் பறிபோய் கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயர் அவருக்கு கசக்கும் பெயராக மாறியிருக்கிறது. ஆளுநர் கொடுத்த விளக்கம் அவர் சொன்னதை விட மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது.

திரும்பப் பெறுக
தமிழை அங்கீகரிக்க மாட்டேன், தமிழ்நாட்டை அங்கீகரிக்க மாட்டேன் என்றால், அவர் ஆளுநராக இருப்பதற்கு தகுதியே கிடையாது. ஆளுநர் திட்டமிட்டு தமிழ்நாடு என்ற பெயரை மறைக்க நினைக்கிறார். அதற்காக நடந்த போராட்டங்களை சிறுமைப்படுத்த முயல்கிறார். மத்திய அரசு இப்படிப்பட்ட ஆளுநர்களை பயன்படுத்திக் கொண்டு பாஜக ஆளாத மாநிலங்களில் நயவஞ்சக ஆட்சியை நடத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாத, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத ஓர் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

காங்கிரஸ் வெற்றிபெறும்
ஒரு வேலை திரும்பப் பெறவில்லை என்றால், இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி ஆளுநர் தேவை இல்லை என்று சொல்லக்கூடிய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிய கேள்விக்கு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும். அது தமிழ்நாட்டில் இருந்து அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவை வெளியேற்றும் வெற்றியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications