சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிருஷ்ணரை பற்றி வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் தப்புதான்.. ஸ்டாலின் அதிரடி பேட்டி

Google Oneindia Tamil News

Recommended Video

    வீரமணி பேச்சுக்கு ஸ்டாலின் மறுப்பு-வீடியோ

    சென்னை: கிருஷ்ண பகவான் குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உள்நோக்கத்தோடு பேசவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தோடு, கடவுள் கிருஷ்ணரை ஒப்பிட்டு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வந்தது.

    இதனால் இந்து அமைப்பினர் கடும் கோபமடைந்துள்ளனர். திராவிடர் கழகம், திமுகவுக்கு ஆதரவு அளிக்க கூடிய இயக்கம் என்பதால், திமுகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

    திராவிட இயக்கங்களின் வரலாற்றில் முதல்முறை.. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காரணம் என்ன? திராவிட இயக்கங்களின் வரலாற்றில் முதல்முறை.. மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு காரணம் என்ன?

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்த நிலையில், திருச்சியில் நேற்று முன்தினம் இரவு வீரமணி பங்கேற்ற திராவிடர் கழக கூட்டத்தில், இந்து முன்னணியில் கல், செருப்பு வீசி தாக்குதலை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணர் குறித்த பேச்சுக்காகத்தான் இந்த தாக்குதல் என கூறப்பட்டது.

    சிறப்பு பேட்டி

    சிறப்பு பேட்டி

    இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிறப்பு பேட்டியளித்தார். அதில் இதுபற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஸ்டாலின் கூறியிருப்பதாவது. வீரமணி கிருஷ்ணரை பற்றி உண்மையாகவே, சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு. ஆனால் அவர் உள்நோக்கத்தோடு எதையும் பேசவில்லை.

    திரித்துவிட்டனர்

    திரித்துவிட்டனர்

    உதாரணம் காட்டி பேசினார் வீரமணி. ஆனால் தேர்தல் களத்தில் ஆர்எஸ்எஸ் போன்ற இந்து அமைப்பினர் திரித்து மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், தனது மனைவி கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றும், காலை, இரவு என கடவுள் வழிபாடு செய்யக்கூடியவர் என்றும், அதில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நான் பின்பற்றும் கொள்கை.

    பராசக்தி கொள்கை

    பராசக்தி கொள்கை

    கோயில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.. அது கொள்ளையர்களின் கூடாரமாகிவிட கூடாது என்பதே பராசக்தி படத்தில் கருணாநிதி எழுதிய வசனம். அதுதான் நாங்கள் பின்பற்றும் கொள்கை. யாருடைய நம்பிக்கையையும் விமர்சனம் செய்வது நோக்கம் இல்லை, என்றார்.

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    மேலும், தமிழகத்தில் இதுவரை 30 லோக்சபா தொகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்துள்ளேன். மக்களின் மனநிலையை என்னால் உணர முடிகிறது. மத்தியில் மோடிக்கு எதிராகவும், மாநிலத்தில் எடப்பாடி அரசுக்கு எதிராகவும், மக்கள் கோபத்தில் உள்ளனர். இவ்விரு அரசுகளுக்கும், முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்கள் நோக்கமாக உள்ளது.

    English summary
    DMK Chief MK Stalin says, I have campaigned in nearly 30 parliamentary constituencies till now. I have sensed public mood. If Veeramani deliberately speaks against Sri Krishna it will be wrong, MK Stalin added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X