”என்னை தாராளமாக புறக்கணியுங்கள்...” மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையத்துக்கு அண்ணாமலை பதில்
சென்னை: தன்னை புறக்கணிப்பதாக இருந்தால் தாராளமாக புறக்கணித்துக்கொள்ளுங்கள் என மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையத்துக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேரம் பேசுவதை போல் அண்ணாமலை விமர்சித்ததற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து தனது ட்விட்டர் கணக்கில் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிகளை டேக் செய்து "பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்கும்வரை, அவரின் பத்திரிகையாளர் சந்திப்பை செய்தி நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும்." என குறிப்பிட்டு இருந்தது.

அண்ணாமலைக்கு கண்டனம்
அதேபோல் அந்த அமைப்பு பேஸ்புக்கில் விரிவான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலையை வன்மையாக கண்டிக்கிறோம். பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாகம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (27.05.22) அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

200 ரூபாய் நிச்சயம்
இந்த சந்திப்பில், நேற்று (26.05.22) பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த சமயம் அவரை வரவேற்பதற்கு பாஜக சார்பாக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும், விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா? என்று செய்தியாளரிடம் கேட்டார். இதற்கு அந்த செய்தியாளர், தன்னிடம் உள்ள ஆதாரம் குறித்து விளக்க ஆரம்பித்த போது, அதை காது கொடுத்து கேட்காமல், அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, உங்களுக்கு "200 ரூபாய் நிச்சயம்" என்று செய்தியாளரை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

கீழ்தரமான நடவடிக்கை
அண்ணாமலையின், இந்த அநாகரிகமான வார்த்தையை அங்கிருந்த மற்ற செய்தியாளர்கள் கண்டித்த போது, "சரி 500 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது 1000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்" என்று எந்த வித அடிப்படை நாகரிகமும் இல்லாமல் அண்ணாமலை பேசியுள்ளார். கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை வாயடைக்கச் செய்யும் வகையில், அவர்களை இழிவுபடுத்துவது ஒரு கீழ்த்தரமான நடவடிக்கையாகும். கடந்த காலங்களிலும் அண்ணாமலை இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பெண் பத்திரிகையாளர்
அதன் தொடர்ச்சியாக இன்று அண்ணாமலை செய்தியாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேபோல், நேற்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது, அதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய பாஜக தலைவர் அண்ணாமலையை மற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்
பெண் பத்திரிகையாளரிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்ட பாஜக நிர்வாகியின் மீது பாஜக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பத்திரிகையாளர்களை மிரட்டுவது, அவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளை பாஜகவினர் இத்துடன் நிறுத்திக்கொள்வதுடன் பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையம் வலியுறுத்துகிறது." என தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை பதில்
இந்த நிலையில் மாற்றத்திற்கான ஊடகவியலளார் மையத்தின் ட்விட்டர் பதிவுக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார். அதில், "பத்திரிகை மீது எங்களுக்கு உண்மையான மரியாதையும் அன்பும் இருக்கிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன; மரியாதை என்பதை கொடுத்து பெற வேண்டும். நீங்கள் என்னைப் புறக்கணிக்க விரும்பினால், அதை தாராளமாக செய்யுங்கள். தர்மம் மற்றும் நெறிமுறைகளைப் பேணுகிறோமோ என உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
என் பெயரை பயன்படுத்த கூடாது.. பதவிக்கு 'மூச்'.. அண்ணாமலை முக்கிய அறிவிப்பு -
தாமரையை கழட்டி வெச்சிட்டு அண்ணாமலை பின்னாடி போகும் ஃபேன்ஸ்.. 2 நாளில் திருப்பம்! பாஜக எதிர்பார்க்கல -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications