பெரியார் கொள்கைக்கு எதிரான படத்துக்கு “நோ”.. கண்டிஷன் போட்டே நடிப்பேன் - நடிகர் சத்யராஜ் விளக்கம்
சென்னை: பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள், இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெறக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துவிட்டுதான் திரைப்படத்திலேயே நடிப்பதாக நடிகர் சத்யராத் தெரிவித்து உள்ளார்.
ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அதில் தானே கதாநாயகநாகவும் நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகியாக இவானா, முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

நேர்காணல்
இந்த திரைப்படம் தொடர்பான தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், நடிகர் சத்யராஜ், கதாநாயகி இவானா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் திரைப்படம் தொடர்பாகவும், பிரபலங்களில் தனிப்பட்ட சினிமா அனுபவம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

நெறியாளர் கேள்வி
இந்த நேர்காணலில் நடிகர் சத்யராஜிடம் நெறியாளர், "அரசியல் கதாபாத்திரங்கள் பற்றி பேசும்போது உங்களுடைய அரசியல் கொள்கை மற்றும் நிலைபாடு, நீங்கள் பெரியாரியவாதி என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும். சினிமாவில் உங்கள் கொள்கைக்கு எதிராக ஏதாவது காட்சி, வசனம் இடம்பெற்றால் அதற்கு எப்படி எல்லையை நிர்ணயிப்பீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.

சத்யராஜ் பதில்
இதற்கு பதிலளித்த சத்யராஜ், "பெரியாருடைய பகுத்தறிவு சிந்தனை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிரான வசனம் வராமல் பார்த்துக்கொள்வேன். அந்த படத்தில் நான் நடிக்காத காட்சியில் வந்தால்கூட அதுபற்றி கேட்பேன். ஷாரூக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஒப்பந்தத்திலேயே இதை குறிப்பிட்டேன்.

சென்னை எக்ஸ்பிரஸ்
இந்த படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே தமிழ் பெண்ணாக நடித்திருப்பார். அவரது தந்தையாக நான் நடித்திருப்பேன். அப்போது இயக்குநரிடம் நான் என்ன சொன்னேன் என்றால், 'ஷாரூக் கான் படத்தின் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாம். ஆனால் ஊரையே சேர்த்து விமர்சிக்கக்கூடாது.' என்றேன். அப்படியென்றால் மொத்த தமிழர்களையும் சொல்வதை போன்றதாகும். இதற்காக நான் தனி விதியே போட்டேன்." என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications