சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது.. பொது இடத்தில் மாஸ்க் கட்டாயம்..மா.சுப்ரமணியன்

பத்துக்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பத்துக்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 3வது தவணையான பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசியை தகுதியானவர்கள் போட வேண்டும். தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று தெரிவித்தார்.

Recommended Video

    COVID-19 பரவலால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா? மா சுப்பிரமணியன் பதில் *Health

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. பொது இடங்களில் மாஸ்க் அவசியம் எனவும் பள்ளி மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையத்தின் குட் நியூஸ் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை மையத்தின் குட் நியூஸ்

    இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    முதல்வர் ஆலோசனை

    முதல்வர் ஆலோசனை


    அமைச்சர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள், முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை அடுத்து தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றாலும், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், மாஸ்க் அணிதலை கட்டாயப்படுத்துதல், உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, அதுகுறித்த தகவல்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

     அமைச்சர் மா.சுப்ரமணியன்

    அமைச்சர் மா.சுப்ரமணியன்

    சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,000 ஐ தாண்டியுள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

     கொரோனா தாக்கம்

    கொரோனா தாக்கம்

    தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் அரசின் விதிமுறையை பின்பற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். கொரோனா தடுப்பு தொடர்பான இன்றைய ஆலோசனையில் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மற்ற மாநிலங்களில் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் குறைவாக உள்ளது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

    கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் 5% குறைவாகவே உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமானால் கோவிட் கேர் சென்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது. 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.

    முக கவசம் அவசியம்

    முக கவசம் அவசியம்

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டும் என்ற பொறுப்பு தலைமைக்கு இருக்க வேண்டும். சமூக இடைவெளி, மாஸ்க் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டத்தை நடத்தலாம். தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம். 10க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்.

    English summary
    Minister M. Subramanian has said that it is mandatory to wear masks in places where more than ten people gather. Speaking to reporters, the minister said that those who are eligible should get the booster dose of corona vaccine. He said that since it has been a year since the vaccination, the immunity is low.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X