மருத்துவ கல்வியில் ஓபிசி கோட்டாவை அமல்படுத்த மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது- ஹைகோர்ட் கண்டிப்பு
சென்னை: 2021-2022ம் கல்வியாண்டில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து காலம் தாழ்த்தாமல் தங்கள் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இட ஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்,திமுக, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில், வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து, 2021-2022ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி அமைக்கப்பட்ட குழு, தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதைச் சுட்டிக் காட்டி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
2021-2022 ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தும், அதை அமல்படுத்தவில்லை என்பதால் இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று அவர் வாதம் முன் வைத்தார்.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் மற்றும் மத்திய அரசு வக்கீல் சந்திரசேகரன் ஆகியோர், மனுவில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி விட்டு, தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கோருவதாகவும், இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள்.. "சலோனி குமாரி வழக்கு உச்சநீதிமன்றத்தால் முடிவு செய்யப்படும் வரை, ஓபிசி இடஒதுக்கீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முயல்கிறது. உச்சநீதிமன்ற வழக்கால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த இயலவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, "என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை 2021-2022 ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த மத்திய அரசு நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications