மிடில் கிளாஸ் மக்களுக்கு ‘செம’ நியூஸ்: வீட்டுமனை வாங்க கூட்டுறவு வங்கிகளில் கடன்! அமைச்சர் அறிவிப்பு
சென்னை : வீட்டு மனை வாங்க கடன் வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் அறிமுகப்படுத்தப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மிடில் கிளாஸ் மக்களுக்கு சொந்த வீடு என்பது பெரும் கனவு. வாடகை வீடுகளில் வசிப்பதில் இருக்கும் அசௌகரியங்கள், வீட்டு வாடகை உயர்வு போன்ற பிரச்சனைகளால் நடுத்தர வர்க்க மக்கள் சொந்த வீடு என்பதையே வாழ்நாள் கனவாகக் கொண்டிருக்கிறார்கள். சொந்த வீடு கட்டவேண்டும் என்பதற்காக பலரும் தனியார் வங்கிகளில் அதிக வட்டிக்கு கடன் பெற்று பல ஆண்டுகளுக்கு வட்டி கட்டுவதைப் பார்த்திருப்போம்.

அந்த நிலையை மாற்றும் வகையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் முக்கியமான அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாவத்தின்போது வெளியிட்டுள்ளார். கூட்டுறவு வங்கிகள் வழியே, அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை வாங்க புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், மற்ற வங்கிகளை விட குறைந்த வட்டி விகிதத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டார்.
கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் 2023-24 செயல்படுத்தப்படும்.
நாட்டுபுறக் கலைஞர்கள், பாரம்பரிய இசைக்கருவி மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலம் சிறப்புக் கடனுதவி வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் மூத்த குடிமக்களுக்கு மறு அடமானக் கடன் வழங்கப்படும்.
ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கக் கடன் வழங்கப்படும்.

கடன் பெறும் உறுப்பினரின் வயது உச்சவரம்பு 60 லிருந்து 70 ஆக உயர்த்தப்படும். மத்திய கூட்டுறவு வங்கி உதவிப் பொதுமேலாளர்களுக்கு பொதுப்பணி நிலைத்திறன் நடைமுறைப்படுத்தப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர் பணியிடத்திற்கான நுழைவுப் பணியிடங்களையும் பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டுவரப்படும்.
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு ஐந்து புதிய கிளைகள் துவங்கப்படும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,500 நியாயவிலைக் கடைகள் பொலிவூட்டப்படும்.
5 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் பெறப்படும். திருவள்ளூர் மாவட்டம் திரூரில் ஒரு கூட்டுறவு அருங்காட்சியகம் அமைக்கப்படும். 2 ஆயிரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றப்படும்.
சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 புதிய வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் அமைக்கப்படும். உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் அமைச்சர் பெரியகருப்பன்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications