உதயசூரியன் சின்னம் + டீ சர்ட் அணிய எதிர்ப்பு.. உதயநிதிக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி - ஷர்ட் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் துணை முதல்வராக மகன் உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை, சிறப்பு திட்ட அமலாக்கம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார்.

திமுகவை பொறுத்தவரை ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பெரும்பாலானவர்கள் வெள்ளை சட்டை, கருப்பு சிவப்பு கரை பொறித்த வேஷ்டி அணிவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கருப்பு பேண்ட், வெள்ளை நிற டீசர்ட்டில் உதயசூரியன் சின்னத்தை வைத்தபடி வலம் வருகிறார்.
வயநாடு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி? பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வியூகம்! பரபர தகவல்
கட்சி நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சிகளிலும் உதயசூரியன் சின்னம் பொறித்த வெள்ளை நிற டீசர்ட் அணிந்தே உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
வாரம் 5 நாள் மட்டுமே பணி.. வங்கி ஊழியர்களுக்கு டிசம்பரில் ஹேப்பி நியூஸ்! பணி நேரம் எப்படி இருக்கும்?
அந்த மனுவில், அனைத்து அரசு ஊழியர்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ள போதிலும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
உட்கார்ந்ததால் வழக்கு.. ஜெயலலிதா விளம்பர செலவை கேட்ட ஆர்டிஐ ஆர்வலர் 10 ஆண்டுக்கு பின் விடுதலை
மேலும் அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை உள்ளதாக கூறியுள்ள மனுதாரர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதால் அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications