Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 வயது ஆகிவிட்டதா?.. வாக்காளர் பட்டியலில் உடனே பெயர் சேர்க்க நல்ல வாய்ப்பு.. 4 நாள் சிறப்பு முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய வசதியாக அடுத்த மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது கட்டாயமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைமுறை வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க இந்தியா முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

இதற்கிடையே தான் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தத்தை 2023-ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம் நீக்கம் தொடர்பான பணிகளை கண்காணிக்க 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசித்து வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்வார்கள்.

அதிகாரிகள் யார் யார்?

அதிகாரிகள் யார் யார்?

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அனில் மேஷ்ராம், தொழில்வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், கைத்திற தொழில் வளர்ச்சிக்கழக இயக்குநர் வெ ஷோபனா ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் துணிநூல் ஆணையர் மா வள்ளலார், வேளாண் துறை சிறப்புசெயலர் த ஆபிரகாம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக தலைவர் சு சிவசண்முகராஜா, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநர் மகேஸ்வரன், குறு, சிறு தொழில்கள் துறை சிறப்பு செயலர் மகேஸ்வரி, நில நிர்வாக ஆணையரக கூடுதல் ஆணையர் ஜெயந்தி ஆகியோரும் கண்காணிப்பாளர்களாக செயல்பட உள்ளனர்.

4 நாள் சிறப்பு முகாம்

4 நாள் சிறப்பு முகாம்

மேலும் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம்களை நடத்துவது பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தேதிகள் முகாம்?

எந்தெந்த தேதிகள் முகாம்?

அதன்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், பெயர் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+