Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்கலில் அமைச்சர்கள்.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் கடும் இழுபறி .. நக்கீரன் சர்வே முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலும் திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நக்கீரன் தேர்தலுக்கு முன்பாக நடத்திய கருத்துக்கணிப்பில், தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என சர்வே எடுத்திருந்தது. அதில், எந்தெந்தத் தொகுதிகளில் எல்லாம் இழுபறி இருக்கும் என்பதை வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்குப் முந்தைய கருத்துக்கணிப்புகளில் விருகம்பாக்கம், ராயபுரம், ஆர்கே நகர், வேளச்சேரி, தி.நகர், சோழிங்கநல்லூர், பல்லாவரம் உள்பட சென்னையில் 7 தொகுதியில் திமுக அதிமுக இடையே இழுபறி இருக்கும் என்று நக்கீரன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மண்டலத்தை பொறுத்தவரை 9 தொகுதியில் திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக நக்கீரன் தெரிவித்துள்ளது. மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை 8 தொகுதிகளிலும், வட மாவட்டங்களில் 9 தொகுதிகளிலும், மத்திய மாவட்டங்களில் 6 தொகுதிகளிலும் திமுக அதிமுக இடையே இழுபறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கோவை தெற்கில் கமல்ஹாசன், வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டி உள்ளதாகவும், போடியில் ஓ பன்னீர்செல்வம், தங்கதமிழ்செல்வன் ஆகியோரிடையே கடும் இழுபறி நிலவுவதாகவும் நக்கீரன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

விருத்தாசலம்

விருத்தாசலம்

இதேபோல் விருத்தாசலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன், பாமக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயன். தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக நக்கீரன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அதிமுகவின் கடம்பூர் ராஜு, அமமுகவின் டிடிவி தினகரன். சிபிஎம் சார்பில் போட்டியிடும் சீனிவாசன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக நக்கீரன் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

தொகுதி மற்றும் வேட்பாளர்கள் வாரியாக இழுபறி நிலவரங்களை இப்போது பார்ப்போம். கடந்த முறை டிடிவி தினகரன் வென்ற தொகுதியான ஆர்.கே. நகர்:தொகுதியில் திமுக எபினேசர். அதிமுக ஆர்.எஸ்.ராஜேஷ் இடையே போட்டி நிலவுகிறது. இதேபோல் ராயபுரம்: தொகுதியில் திமுகவின் ஜ.ட்ரீம் மூர்த்தி அதிமுகவின் அமைச்சர் ஜெயக்குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. விருகம்பாக்கம் தொகுதியில் திமுக பிரபாகர் ராஜா மற்றும் அதிமுகவின் விருகை ரவி இடையே கடும் போட்டி காணப்படுகிறது. தி.நகர் தொகுதியில் திமுக ஜெ. கருணாநிதி மற்றும் அதிமுக சத்தியநாராயணன் இடையே போட்டி காணப்படுகிறது. சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுகவின் அரவிந்த் ரமேஷ் மற்றும் அதிமுகவின் கே.பி.கந்தன் இடையே கடும் போட்டி காணப்படுவதாக நக்கீரன் தெரிவித்துள்ளது. வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அசன் மௌலானா மற்றும் அதிமுகவின் அசோக் இடையே போட்டி காணப்படுகிறது. பல்லாவரம் தொகுதியில் திமுகவின் இ. கருணாநிதி, அதிமுகவின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் இடையே பலமான போட்டி நிலவுகிறது.

விருத்தாசலம்

விருத்தாசலம்

செய்யூர் (தனி): விசிக பனையூர் பாபு vs அதிமுக கணிதா சம்பத்.
உத்திரமேரூர்: திமுக சுந்தர் vs அதிமுக சோமசுந்தரம்
சோளிங்கர்: காங்கிரஸ் முனிரத்தினம் vs பாமக கிருஷ்ணன்
கே.வி.குப்பம் (தனி): திமுக காத்தவராயன் vs புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி
ஜோலார்பேட்டை: அதிமுக கே.சி.வீரமணி vs திமுக தேவராஜ்
போளூர்: திமுக சேகரன் vs அதிமுக அக்ரி. கிருஷ்ணமூர்த்தி
திண்டிவனம் (தனி): திமுக சீதாபதி vs அதிமுக அர்ச்சுனன்
உளுந்தூர்பேட்டை திமுக மணிகண்ணன் vs அதிமுக குமரகுரு
விருத்தாசலம்: காங்கிரஸ் ராதாகிருஷ்ணன் vs பாமக கார்த்திகேயன் vs தேமுதிக பிரேமலதா

சிக்கலில் அமைச்சர்கள்

சிக்கலில் அமைச்சர்கள்

நாமக்கல்: திமுக ராமலிங்கம் vs அதிமுக கே.பி.பி. பாஸ்கர்
குமாரபாளையம்: திமுக வெங்கடாஜலம் vs அதிமுக தங்கமணி
ஈரோடு கிழக்கு: காங்கிரஸ் திருமகன் ஈ.வே.ரா. vs அதிமுக யுவராஜ்
கோபிசெட்டிப்பாளையம்: திமுக மணிமாறன் vs அதிமுக செங்கோட்டையன்
உடுமலைப்பேட்டை: அதிமுக உடுமலை ராதாகிருஷ்ணன் vs காங்கிரஸ் தென்னரசு
கூடலூர் (தனி): திமுக காசிலிங்கம் vs அதிமுக ஜெயசீலன்
தொண்டாமுத்தூர்: திமுக கார்த்திகேய சிவசேனாபதி vs அதிமுக எஸ்.பி.வேலுமணி
கோவை தெற்கு: காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் vs மநீம கமல்ஹாசன் vs பாஜக வானதி சீனிவாசன்

சி. விஜயபாஸ்கர்

சி. விஜயபாஸ்கர்

குன்னம்: திமுக சிவசங்கர் vs அதிமுக ராமச்சந்திரன்
நாகப்பட்டினம்: விசிக ஆளூர் ஷாநவாஸ் vs அதிமுக தங்க கதிரவன்
நன்னிலம்: திமுக ஜோதிராமன் vs அதிமுக ஆர். காமராஜ்
திருவிடைமருதூர் (தனி): திமுக கோவி. செழியன் vs அதிமுக வீரமணி
தஞ்சாவூர்: திமுக டி.கே.ஜி. நீலமேகம் vs அதிமுக அறிவுடைநம்பி
பேராவூரணி: திமுக அசோக்குமார் vs அதிமுக திருஞானசம்மந்தம்
விராலிமலை: திமுக பழனியப்பன் vs அதிமுக சி. விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: திமுக முத்துராஜ் vs அதிமுக கார்த்திக் தொண்டைமான்

11 தொகுதிகள்

11 தொகுதிகள்

நிலக்கோட்டை: திமுக முருகவேல் ராஜன் vs அதிமுக தேன்மொழி
வேடசந்தூர்: திமுக காந்திராஜன் vs அதிமுக பரமசிவம்
சிவகங்கை: சிபிஐ குணசேகரன் vs அதிமுக செந்தில்நாதன்
போடி: திமுக தங்க தமிழ்ச்செல்வன் vs அதிமுக ஓ.பி.எஸ்.
சாத்தூர்: மதிமுக ரகுராமன் vs அதிமுக ரவிச்சந்திரன் vs அமமுக ராஜவர்மன்
சிவகாசி: காங்கிரஸ் அசோகன் vs அதிமுக லட்சுமி கணேசன்
பரமக்குடி: திமுக முருகேசன் vs அதிமுக சதர்ன் பிரபாகர்
விருதுநகர்: திமுக சீனிவாசன்vs பாஜக பாண்டுரங்கன்
திருவாடானை: காங்கிரஸ் கரு. மாணிக்கம் vs அமமுக ஆனந்த்
கோவில்பட்டி: அதிமுக கடம்பூர் ராஜு vs அமமுக டிடிவி தினகரன்vs சிபிஎம் சீனிவாசன்
அம்பாசமுத்திரம்: திமுக ஆவுடையப்பன் vs அதிமுக இசக்கி சுப்பையா

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+