சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறப்பு காரியங்களுக்கு சென்று வந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிகரிப்பு.. விழிப்புணர்வு அவசியம்

Google Oneindia Tamil News

சென்னை: உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கே செல்லாமல் பலர் வீட்டிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. சாவு வீட்டிற்கு சென்றுவந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவங்களும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழலில் மக்களிடையே.. விழிப்புணர்வு அவசியம் ஏற்பட வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று நாட்டிலேயே தினசரி பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக (33000த்துக்கும் அதிகம்) தமிழகம் மாறி உள்ளது. உயிரிழப்பும் அதிகமாக உள்ளது.

மக்கள் கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே உள்ளார்கள். இந்த சூழலில் திடீரென பலர் காய்ச்சல், நெஞ்சுவலி உள்பட பல்வேறு உடல்நலக்குறைவு காரணங்களால் வீட்டிலேயே உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வூட்டும் போலீஸ்காரர் பாலா.. கைகளை தட்டி உற்சாகமூட்டும் மதுரைவாசிகள்..!பாட்டு பாடி கொரோனா விழிப்புணர்வூட்டும் போலீஸ்காரர் பாலா.. கைகளை தட்டி உற்சாகமூட்டும் மதுரைவாசிகள்..!

சரியான தகவல்கள் இல்லை

சரியான தகவல்கள் இல்லை

மருத்துவமனைக்கு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களைவிட வீட்டில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஏனெனில் உடல்நலக்குறைவால் இறந்து போகிறவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்படாது என்பதால் அவர்கள் என்ன காரணத்தால் இறந்தார்கள் என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. இதில் எத்தனை பேர் கொரோனால் இறந்திருப்பார்களோ என்ற அச்சம் அதிகமாக உள்ளது. இறப்பு காரியங்களுக்கு சென்று வந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிகரிப்பு.. விழிப்புணர்வு அவசியம்

இறப்பு காரியங்கள்

இறப்பு காரியங்கள்

இதில் இன்னொரு பிரச்சனையும் புதிதாக உருவாகி உள்ளது. இப்படி உடல்நலக்குறைவால் உயிரிழந்தவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறுதி காரியங்களை செய்கிறார்கள். இதன் பின்னர் வீட்டிறகு வருபவர்கள் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. கிராமங்களிலும், சிறிய நகரங்களிலும் இது அதிகரித்துள்ளது., அடுத்தடுத்து நடக்கும் இச்சம்பவங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியம்.

இறந்த உடல் மூலம் பரவுமா

இறந்த உடல் மூலம் பரவுமா

ஏனெனில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இறப்பர்வர்களுக்கு ஒருவேளை கொரோனா பாதித்து இருந்தால், அவர்களின் உடல் மூல்ம் மற்றவர்களுக்கு கொரோனா பரவும் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை. இறந்துபோனவர்களின் உடலில் கொரோனா வைரஸ் பல்கி பெருகுவது நின்று போகும்.

மக்களே கவனம்

மக்களே கவனம்

ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு வரும் மற்றவர்கள், குடும்பத்தினர் என யார் மூலம் வேண்டுமானாலும் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இறப்பு காரியங்களுக்கு செல்பவர்கள் மிகவும் கவனமுடன் இருப்பது மட்டுமே அவர்களையும், அவர்களின் குடும்பத்தையும் பாதுகாக்க உதவும்.

English summary
There has been an increase in the number of deaths at home in Tamil Nadu due to ill health. There has also been a recent increase in the number of deaths following who went funarial function . Awareness needs to be created among the people in the current environment where corona infection is spreading.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X