’தென்மேற்கு’ பருவகாற்று ‘தேனி’ பக்கம்! ஒரே நாளில் மாறிய ‘கிளைமேட்’! ஹாப்பி மோடில் ஓபிஎஸ் & கோ! என்ன?
சென்னை : அதிமுகவில் ஒருபக்கம் மாற்றி மாற்றி எடப்பாடி தரப்புக்கு சமாதான தூது அனுப்பியபடியே இருந்தாலும், மறுபுறம் எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகளை தனது தரப்புக்கு இழுக்கும் முயற்சியையும் கைவிடாத ஓபிஎஸ் தரப்பில் நேற்று மட்டும் 3 ஒன்றிய செயலாளர்கள், 2 முன்னாள் மாவட்ட செயலாளர்கள், 1 முன்னாள் எம்.எல்.ஏ. இணைந்திருக்கிறார்கள்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக இலைமறை காயாக இருந்த அதிகார மோதல் தற்போது உள்ளங்கை நெல்லிக்கனியாக பட்டவர்த்தனமாக வெளியே தெரிவது கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இனி எக்காலத்திலும் ஓபிஎஸ் உடன் கைகோர்க்கவே மாட்டேன் என உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக மோதல்
ஒருபுறம் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என அடுத்தடுத்து சட்ட போராட்டங்களுக்கு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் நீதிமன்றத்தால் தற்போது கை கொடுக்காமல் இருந்தாலும் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் எப்படியும் கட்சியின் தலைமையை கைப்பற்றி விடலாம் என தைரியமாக இருக்கிறார்

எடப்பாடி பழனிச்சாமி
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். எது எப்படி எனும் இரண்டுமே நடக்காது என உறுதியாக அடித்துச் சொல்கின்றனர் அதிமுகவினர். ஒருபுறம் ஓபிஎஸ் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிச்சாமியுடன் இணையலாம் என அழைப்பு விடுத்தும் அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று கூட செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்-ன் மகனான ரவீந்திரநாத் குமார் எம்பி சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் தரப்பில் தூது
இப்படி ஓபிஎஸ் தரப்பில் இருந்து அடுத்தடுத்து சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டு வந்தாலும் அதிமுகவில் ஒற்றை தலைமை தான் அதுவும் தான் என உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வத்தின் தூதுகளை ஏற்கவில்லை. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து தேனி வந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு மதுரையிலிருந்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அடுத்தது என்ன?
அப்போதிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் ஓபிஎஸ்ஐ சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் நேற்று ஒரே நாளில் 3 ஒன்றிய செயலாளர்கள். இரண்டு முன்னாள் மாவட்ட செயலாளர். முன்னாள் எம்எல்ஏக்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் ஓபிஎஸ்-ஐ சந்தித்திருக்கும் தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் தென் மாவட்டங்களில் இருக்கும் நிர்வாகிகள் தன் பக்கமே இருக்க வேண்டும் என்பதை உறுதியாக இருக்கிறார். இதற்காக ஓ பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளையும் மீறி தங்கள் தரப்பு நிர்வாகிகளை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுகவை பொருத்தவரை அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை என்பதே உண்மை.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications