ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் விஜய பிரபாகரன்! பார்த்ததுமே தமிழிசை தோளை தட்டி சொன்ன வார்த்தை!
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும் பார்த்தசாரதியும் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், விஜய பிரபாகரனை பார்த்ததும் என்ன சொன்னார் தெரியுமா?
குடியரசு தினம், சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வைக்கப்படும். இதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த முறை 79 ஆவது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த முறை தேநீர் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகளுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்தார். இந்த தேநீர் விருந்தை திமுக, அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது.
அது போல் எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக உள்ளிட்டவை கலந்து கொள்ளும் என அறிவித்திருந்தன. அந்த வகையில் நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பி இன்பதுரை, எம்எல்ஏக்கள் பாண்டியன், மரகதம் குமரவேல், பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில செயலாளர் அஸ்வத்தமன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், தேமுதிக சார்பில் இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாமக எம்எல்ஏக்கள் சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த சுவாமி, தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு வந்திருந்தவர்களை ஆளுநர் ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.
கொள்கை, கோட்பாடுகளில் வேறுபாடு இருந்தாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் போது சிரித்து பேசுவர். அதை பார்க்கும் போது இவர்களா இப்படி ஒருவர் மீது ஒருவர் விமர்சனம் செய்தது என்ற கேள்வி வரும்.

அந்த வகையில் நிகழ்வுக்கு வந்தவர்களுடன் நயினார் நாகேந்திரன் வரவேற்று நலம் விசாரித்தார். அப்போது அந்த இடத்தில் 3 பேர் நின்றிருந்தனர். நடுவில் விஜய பிரபாகரன், வலது புறம் யாரோ நின்றிருந்தார்கள். அவருக்கு இடது புறம் பார்த்தசாரதி இருந்தார்.
அப்போது அங்கு வந்த நயினார் நாகேந்திரன், இருவருக்கும் வணக்கம் வைத்துவிட்டு விஜய பிரபாகரனை கவனிக்கவில்லை. உடனே பார்த்தசாரதி, நயினார் நாகேந்திரனை அழைத்து காட்டியவுடன், "ஆ வாங்க வாங்க" என கைகுலுக்கிவிட்டு, மீண்டும் ஒருமுறை அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
அப்போது அங்கு வந்த தமிழிசை சவுந்திரராஜன், விஜய பிரபாகரனை பார்த்ததும் "எப்படி இருக்கீங்கப்பா?, பார்க்கிறேன் பார்க்கிறேன், பிரமாதமா அப்பா மாதிரியே பேசுறீங்களே" என தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications