உலக வங்கியில் ரூ 4 லட்சம் கோடி கடன்.. கையில் 1.76 லட்சம் கோடி ரொக்கம்.. ஷாக் சுயேச்சை!
Recommended Video

சென்னை: சுயேச்சை வேட்பாளர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு குறித்த அபிடவிட் தகவல்கள் அதிர வைப்பதாக உள்ளன. அதை விட பெரிய அதிர்ச்சி என்னவென்றால் இதை தேர்தல் அதிகாரிகள் ஏற்று அனுமதித்துள்ளனர். அதை விட மிகப் பெரிய அதிர்ச்சி என்னன்னா இவர் தாக்கல் செய்த அபிடவிட்டை உயர்நீதிமன்ற நோட்டரி பப்ளிக் ஒப்புதல் கொடுத்து சான்றிதழ் அளித்துள்ளதுதான்.
அப்படி என்ன செய்து விட்டார் என் கட்சிக்காரர் என்று மக்கள் கேட்பது காதில் விழுகிறது. இந்த சுயேச்சை வேட்பாளர் இதை தெரிந்துதான் செய்தாரா இல்லை தெரியாமல் செய்தாரா என்பது இன்னொரு வேடிக்கையான கேள்வியாகும்.
உண்மைதான், மறைந்த நெல்லை ஜெபமணியின் மகன்தான் ஜே. மோகன்ராஜ். இவர்தான் இந்த செய்தியின் கலாட்டா நாயகன்.. அதாவது கதாநாயகன்.

மோகன்ராஜ்
ஜெபமணி ஜனதா.. இதுதான் கட்சியின் பெயர். இதன் தலைவராக இருந்தவர்தான் மறைந்த ஆர்.ஜெபமணி. எல்லோருக்கும் நெல்லை ஜெபமணி என்றால் நன்றாக தெரியும். இவரது மகன் பெயர்தான் ஜே மோகன்ராஜ் என்பதாகும். இவர் கிழக்கு அபிராமபுரம், மயிலாப்பூரில் வசித்து வருகிறார். 67 வயதாகிறது.

சுயேட்சை
பெரம்பூர் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார் சுயேச்சை வேட்பாளரான ஜே. மோகன்ராஜ். இதுவரை எல்லாம் சரிதான். ஆனால் இனிமேதான் மேட்டரே ஆரம்பிக்கிறது.

கலாட்டா
ஜே. மோகன்ராஜ் தேர்தல் அதிகாரியிடம் ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அதைப் பார்த்தால் அப்படியே நெஞ்சே அடைத்து விடும் போல இருக்கிறது. அப்படி ஒரு கலாட்டாவை செய்து வைத்துள்ளார் இந்த மோகன்ராஜ்.

ஆனந்தி நகை
அதில் ரொக்கக் கையிருப்பு என்ற பகுதியில் பார்த்தபோது இவரிடம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி ஆனந்தியிடம் வெறும் ரூ. 20,000 பணம்தான் உள்ளதாம் (ரொம்பப் பரிதாபம்தான்). இதுதவிர ஆனந்தியிடம் 13 பவுன் நகைகள் வேறு உள்ளதாம்.

நகைக் கடன்
ஆச்சா, அடுத்து நகை மேட்டருக்கு வருவோம். மைலாப்பூர் தென்னிந்திய வங்கி மற்றும் திருவள்ளூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் ரூ. 3 லட்சத்திற்கு நகைக் கடன் பாக்கி இருக்கிறதாம்.

வருமான வரி
அடுத்த மேட்டர்தான் உலக மகா ஷாக். அதாவது நம்ம மோகன்ராஜ் உலக வங்கியிடம் ரூ. 4 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளாராம். இதுதான் அதிர வைத்துள்ளது. இவர் கடைசியாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தது 2002-03ல்தானாம். அதன் பிறகு வருமான வரித்துறை பக்கமே எட்டிக் கூட பார்க்கவில்லை போல.

தேர்தல் ஆணையம்
இந்த அபிடவிட் இப்போது வைரலாகி வருகிறது. இந்த அபிடவிட்டை அத்தாட்சி கொடுத்து சான்றிதழ் அளித்த புண்ணியவான் பெயர் வழக்கறிஞர் வி. அறிவழகன் என்பதாகும். இந்த அபிடவிட்டை தேர்தல் ஆணையமும் ஏற்று அதன் இணையதளத்திலும் போட்டு வைத்துள்ளது.

புரியலையே..
மோகன்ராஜ் வேண்டும் என்றேதான் இந்த அபிடவிட்டைக் கொடுத்திருப்பது உறுதியாகிறது. ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான் புரியவில்லை. நமது நாட்டில் அதிகாரிகள் எந்த அளவுக்கு ஓட்டையாக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறாரா அல்லது நமது நாட்டின் ஊழல் உள்ளிட்ட நிலையை மக்களுக்கு சுட்டிக் காட்ட விரும்பினாரா என்பதும் புரியவில்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications