முதலாளித்துவ மனநிலைக்கு மக்கள் போயாச்சு.. இடதுசாரிகள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் இதுதான்!
சென்னை: நமது நாட்டில் ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு யார் வருவார்கள் என்பதையே தீர்மானிக்கும் நிலையில், இடதுசாரிகள் இருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அதன் பலம் நாளுக்கு நாள் சரிந்து, இப்போது மிகவும் பலவீனமான ஒரு நிலையில் உள்ளனர். இடதுசாரிகள் இந்தளவுக்கு தங்கள் பலத்தை இழக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
ஒரு காலத்தில் இந்தியாவில் மிக முக்கியமான கட்சியாக இருந்தவை இடதுசாரிகள்.. நமது நாட்டில் நலத்திட்டக் கொள்கைகளுக்கு அடித்தளமாக இருந்ததே இடதுசாரிகள் தான்.. ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே அதன் பலம் மெல்லச் சரிந்தே வருகிறது. மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த இடதுசாரிகள், இன்று தொண்டர் பலத்தை இழந்து ஒரு சீட்களில் கூட வெல்ல முடியாமல் திணறுகிறது. திரிபுரா மிக வலிமையாக இருந்த இடதுசாரிகளின் நலத்திட்டக் கொள்கைகளைக் கையில் எடுத்த பாஜக அவர்களை காலி செய்துவிட்டது.

பலவீனம்
இப்போது, கேரளாவில் மட்டுமே இடதுசாரிகள் ஆட்சியில் உள்ளன. பொதுத்துறை பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புகள் எனப் பல விவகாரங்களில் இடதுசாரிகள் முக்கியமாகத் தேவைப்படுகிறார்கள். இன்றைக்கும் கூட மக்கள் பிரச்சனை என்றால் முதலில் களத்திற்கு வருவது இடதுசாரிகள் தான். ஆனால், அரசியல் அரங்கில் குறிப்பாகத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகளின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது என்பதே உண்மை.
காரணம்
ஒரு காலத்தில் தீவிர நிலச் சீர்திருத்தங்கள், தொழிற்சங்க வலுவூட்டுவது மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள் இடதுசாரிகள். ஆனால், இன்று தேசியளவில் அரசியல் அரங்கில் ஒரு சிறிய இடத்தை மட்டுமே பிடித்துள்ளன. இந்தியாவில் ஏற்படும் மாற்றங்கள், குறிப்பாக இந்திய இளைஞர்களின் மனநிலை மாறுவதே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
முதலில் தத்துவார்த்த பலம் சரிவது.. குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா போன்ற மாநிலங்களில் அதன் தத்துவார்த்த பலம் மிகவும் குறைந்துவிட்டது. அடையாள அரசியல் மற்றும் அடிமட்ட மக்களின் விருப்பங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இடதுசாரிகளின் பாரம்பரிய ஆதரவுத் தளம் சுருக்கிவிட்டன. பாஜக போன்ற போட்டி கட்சிகள், இடதுசாரிகளின் பலமான நலத்திட்டக் கொள்கைகளை தங்கள் கையில் எடுத்தன. நலத்திட்டங்களைக் கலாச்சாரம், தேசியவாதம் ஆகியவற்றுடன் சேர்த்து அதிக வாக்காளர்களை ஈர்த்து வருகின்றன. இது இடதுசாரிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இளைஞர்கள் நினைப்பது என்ன
அதேபோல இடதுசாரிகள் நடப்பு அரசியலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றே பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், கருதுகிறார்கள். இப்போதும் கூட பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பழைய கோஷங்களிலேயே இடதுசாரிகள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இன்றைய அரசியல் யதார்த்தங்களுடன் அவை பொருந்தவில்லை என்றே பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.
கேரளாவில் கூட, இடதுசாரி கட்சிகளுக்கு இன்னும் வலுவான இருந்தாலும் அவை தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டன. மக்களுக்கு என்ன தேவை மற்றும் நிர்வாகத்தில் தான் கேரள இடதுசாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களின் கொள்கைகள் பலவீனமடைந்து வருகின்றன. இது ஒரு முக்கிய மாற்றத்தைக் காட்டுகிறது. இதுபோல தேசியளவிலும் தங்கள் ஸ்டைலை மாற்றினால் மட்டும் இடதுசாரிகளால் மீண்டு வர முடியும் என்றே சொல்லப்படுகிறது.
தேர்தல் அரசியல்
தேர்தல் களத்திலும் இடதுசாரிகள் பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது.. கடந்த கால தேர்தல் முடிவுகளைப் பார்த்தாலே இது நமக்குப் புலப்படும்.. 2004ல் மக்களவையில் 61 இடங்களைப் பெற்றிருந்த இடதுசாரிகளால், 2024ல் அவர்கள் ஒற்றை இலக்கத்தில் சரிந்துவிட்டன. பொது விவாதங்களை வடிவமைப்பதிலும், கூட்டணிக்குச் சவால் கொடுப்பதிலும் முன்பு இடதுசாரிகளுக்குக் கணிசமான பங்கு இருந்தன. ஆனால், இப்போது அது கணிசமாகக் குறைந்துவிட்டது. அறிவுசார் மட்டத்தில் கூட இடதுசாரிகளின் செல்வாக்கு குறைந்தே வருகிறது.
அதேபோல உட்கட்சி முரண்பாடுகளும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தலைமை பதவிகளில் உயர் சாதியினர் நீடிப்பது, மற்ற தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதேபோல இடதுசாரி கட்சிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படுவதில்லை என்ற விமர்சனங்களும் இருக்கவே செய்கிறது. இப்படிப் பல காரணங்கள் சேர்ந்து இடதுசாரிகளைப் பலவீனமாக்கி வருகிறது.
இந்தி மாநிலங்கள்
மேலும், இடதுசாரிகள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்தி பேசும் மாநிலங்களில் இடதுசாரிகள் குரல் பெரும்பாலும் ஒலிப்பதில்லை. இந்தியாவில் ஆட்சிக்கு வருவது யார் என்பதையே இந்தி பேசும் மாநிலங்கள் தான் நிர்ணயம் செய்கிறது. அங்கு தேசிய சிந்தனையுடன் பாஜக வளர்ந்துவிட்டதால் இடதுசாரிகள் பலம் நாளுக்கு நாள் குறைந்தே வருகிறது.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
திமுக - சிபிஎம் இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. 5 இடங்கள் ஒதுக்கீடு! முடிவுக்கு வந்தது நீண்ட இழுபறி -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
சீட் தரேன்.. யாராவது இருக்கீங்களா? தேடி தேடி ஆள் பிடிக்கும் ராமதாஸ்.. இப்படி ஒரு மோசமான நிலையா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications