ரைட்டரின் மடியில் அமர்ந்த பெண்! கேஸ் நினைவிருக்கா? இப்ப விசாரணைக்கு வந்தவரிடம் கேரள நீதிபதி சீண்டல்
சென்னை: ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என சமீபத்தில் வழக்கு ஒன்றில் கேரளா கோர்ட் தீர்ப்பு வழங்கியிருந்தது மிகப்பெரிய விவாதத்தையும், சர்ச்சையையும் சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தியிருந்தது.. இந்நிலையில், விவாகரத்து வழக்கிற்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கேரளா நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது கேரளா மாநிலத்தில்?
சமீபத்தில் கேரள ஹைகோர்ட்டில் நீதிபதி ஒருவர் விநோத தீர்ப்பை அளித்திருந்தார்.. அதாவது கேரளாவில் வசித்து வரும் எழுத்தாளர் சிவிக் சந்திரன் என்பவருக்கு 74 வயதாகிறது.. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.

இவர்மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது.. கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில், கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தனக்கு சிவிக் சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தந்திருந்தார்.. இதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று, சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ரைட்டர் மடி மீது உட்கார்ந்த பெண்
அதுமட்டுமல்ல, புகார் தந்த பெண், தன்னுடைய மடி மீது உட்கார்ந்திருக்கும் போட்டோவையும் சிவிக்சந்திரன் தன்னுடைய மனுவில் இணைத்து தந்தார்.. இதற்கு பிறகு இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது.
நீதிபதி தன்னுடைய உத்தரவில், 'முன்ஜாமீன் கோரி மனுதாரர் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இணைக்கப்பட்ட போட்டோக்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தன்னுடைய உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் உள்ளது.
மாற்றுத் திறனாளி போட்டோ
உடல் ரீதியிலான தொடர்பு (Physical Contact) இருந்தது ஒப்புக்கொண்டபோதும், 74 வயதான மாற்றுதிறனாளி நபர் புகார் அளித்த பெண்ணை தன்னுடைய மடியில் வலுக்கட்டாயமாக உட்கார வைத்து, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக சொல்வதை நம்பமுடியவில்லை. எனவே, சட்டப்பிரிவு 354 ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது என்று கருதப்படுகிறது. இதன் மூலம் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது' என்று நீதிபதி தீர்ப்பளித்தார்..
இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்தன.. ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருந்தது விவாதத்தையும், சர்ச்சையையும் அப்போது சோஷியல் மீடியாவில் கிளப்பியது நினைவிருக்கலாம்.
நீதிபதியிடமே புகார்
இந்நிலையில், மீண்டும் கேரள மாநில கோர்ட்டில் ஒரு பாலியல் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.. கொல்லம் மாவட்ட குடும்ப நல நீதிபதியாக இருந்தவர் உதயகுமார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு விசாரணைக்காக தன்னிடம் வந்த ஒரு இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண், கொல்லம் மாவட்ட நீதிபதியிடம் புகார் அளித்தார்.. அந்த புகார் உடனடியாக கேரள ஹைகோர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த புகாரின்மீதுதான் தற்போது விசாரணையை நடத்தியிருக்கிறது ஹைகோர்ட்.. இதில், குடும்ப நல நீதிபதி உதயகுமாரை கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டது.. மேலும், இதுதொடர்பாக ஐகோர்ட்டு பதிவாளர், விசாரணை நடத்தி அறிக்கையாக தாக்கல் செய்தார்.
நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட குடும்ப நல நீதிபதி உதயகுமார், கொல்லம் மாவட்ட வாகன விபத்து தீர்ப்பாயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.. இருப்பினும் மறு அறிவிப்பு வரும்வரை எந்த நீதித்துறை பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் குழுவினர் குற்றம்சாட்டப்பட்ட நீதிபதி உதயகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து வழக்கிற்கு வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications