போதைப்பொருள்..வேர்ல்ட் லெவல் NETWORK! யார் இந்த ஜான் பிரிட்டோ? மார்ட்டின் குடும்பத்துக்கு நெருக்கமா?
சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் வகையில், ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைகள் குறித்து அதிர வைக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஜான் பிரிட்டோ மூளையாக செயல்பட்டதாக அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமாரோஸ் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்ற தகவல் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டிஆர்ஐ (Directorate of Revenue Intelligence - DRI) பதிவு செய்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்குகளின் அடிப்படையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அமலாக்கத்துறையின் சொன்ன தகவல்களின் படி, ஜான் பிரிட்டோ தலைமையில் செயல்பட்டதாக கூறப்படும் குழு, தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தியதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
அமலாக்கத்துறை
குறிப்பாக மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களை பயன்படுத்தி, கடலின் நடுப்பகுதியில் போதைப் பொருட்களை கொண்டு சென்று கடத்தல் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ரெமிஸ்டன், ரமீஷ், ஜான்சன் மற்றும் பிரதாப் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. இவர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டதாகவும், இலங்கையில் உள்ள கும்பலுக்கு போதைப்பொருட்கள் அனுப்பப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்
கடந்த 2024 மார்ச் 5-ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில், சுமார் 99 கிலோ 'ஹஷீஷ்' (Hashish) போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு ரூ.108 கோடி என மதிப்பிடப்பட்டது. மற்றொரு வழக்கில், மதுரை ரயில் நிலையத்தில் பிலோமென் பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் 37.645 கிலோ மெத்தம்பெட்டமைன் (methamphetamine) கைப்பற்றப்பட்டது. அதன் மதிப்பு ரூ.150 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜான் பிரிட்டோ
இந்த இரண்டு வழக்குகளிலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் ஒரே நெட்வொர்க்குடன் தொடர்புடையவை என்றும், இந்த கடத்தலின் பின்னணியில் ஜான் பிரிட்டோ இருப்பதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. மேலும், போதைப்பொருள் விற்பனையின் மூலம் கிடைத்த பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஜான் பிரிட்டோ வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகவும், அங்கிருந்து தனது கடத்தல் நெட்வொர்க்கை இயக்கி வருவதாகவும் அமலாக்கத்துறை சொல்கிறது.
முக்கிய ஆதாரங்கள்
இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை (ED) சென்னை மண்டல அலுவலகம், 2026 மே 26-ஆம் தேதி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள 5 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளின் போது, பணமோசடி குற்றச்செயலுடன் தொடர்புடைய முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இரு போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களிலும் ஜான் பிரிட்டோ (John Britto) என்பவரே முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
ED, Chennai Zonal Office has conducted search operations at five places located in Chennai & Ramanathapuram in a matter related to cross border smuggling of Narcotics substances, under PMLA, 2002 on 26.05.2026. During the search operations, various incriminating evidence were… pic.twitter.com/8qsHXt4DvY
— ED (@dir_ed) May 27, 2026
ஹவாலா
ஜான் பிரிட்டோவின் உத்தரவின் பேரில் போதைப்பொருட்களை எடுத்துச் சென்று விநியோகித்ததற்காக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கமிஷன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், தனது நடவடிக்கைகளுக்காக ஜான் பிரிட்டோ ஹவாலா (Hawala) முறையின் மூலம் பணத்தை பரிமாறி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கும், தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளுக்கும் பணம் வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜான் பிரிட்டோ தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்" என கூறியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா
இந்த நிலையில் தான், இந்த வழக்கு அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தலைமறைவாகி இருக்கும், ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமா ரோஸ் மார்டினின் உறவினர் என சமூக வலைதளங்களிலும் தகவல் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications