ஹெல்த் இன்சூரன்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்க! கடைக்கு காப்பீடா! மிக்ஜாமில் கிளைம் பெற்ற கடைக்காரர்கள்
சென்னை: மிக்ஜாம் புயலால் கடைகள் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு இன்சூரன்ஸ் செய்திருந்தால் அந்த நிறுவனமே சேதத்திற்கான மதிப்பீட்டை தருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்கள்.
சென்னையில் மிக்ஜாம் புயலால் வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம், வரதராஜபுரம், அண்ணாநகர், முகப்பேர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

பல இடங்களில் 4 அடிக்கு மேல் தண்ணீர் சென்றதால் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், கடைகள், வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை சேதமடைந்துவிட்டன.
இந்த நிலையில் பலர் இரு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்தியிருந்த நிலையில் வெள்ளம் வடிந்த பிறகு அதை ஷோ ரூமில் சர்வீஸிற்கு விட்டுச் சென்றனர். அது போல் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் எதுவாக இருந்தாலும் யாரும் அதை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் என மெக்கானிக்குகள் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தனர்.
இதையடுத்து பலர் தங்கள் வாகனங்களை சர்வீஸ் சென்டரில் கொண்டு போய் விடுகிறார்கள். அந்த வகையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வாகனங்களை ரிப்பேர் செய்து அதை கிளைம் செய்வதற்காக முகாம் அமைத்துள்ளார்கள். அந்த வகையில் சென்னையில் நடந்த முகாமில் பலர் மிக்ஜாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்களை ரிப்பேர் செய்து அதன் ரசீதை கொண்டு வந்து கொடுத்து கிளைம் செய்தனர்.
இதுகுறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி பேசுகையில் மிக்ஜாம் புயல் வந்து வெள்ளப் பாதிப்பு வந்ததுமே எங்கள் வாடிக்கையாளர்கள் கிளைம் செய்யலாம் என நாங்கள் நாளிதழ்களிலும் எஃப்எம் ரேடியோவிலும் விளம்பரப்படுத்தியிருந்தோம். அந்த வகையில் இன்று நடந்த முகாமுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து பலன் பெற்றனர்.
இந்த முகாமை வேளச்சேரி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த போகிறோம். அது போல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தை குறைதீர் அலுவலகமாக மாற்றி அங்கு தினந்தோறும் வாடிக்கையாளர்கள் கிளைம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். வாகனங்கள் மட்டுமல்லாமல் கடைகள், வீடுகள் உள்ளிட்டவை சேதமடைந்ததற்கும் எங்களால் இயன்றதை செய்து வருகிறோம் என்றார். தொழிற்சாலைகள் சேதமடைந்திருந்தாலும் இன்சூரஸ் செய்த தொகைக்கேற்ப அவர்களுக்கும் நிவாரணம் தருகிறார்கள்.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் பேசுகையில் அண்ணாநகரில் எனக்கு சொந்தமான மளிகைக் கடை உள்ளது. இங்கு வந்தேன், எனது கடை சேதாரத்திற்கு அரை மணி நேரத்தில் செக் கொடுத்தார்கள், மிகவும் திருப்தியாக இருக்கிறது என்றார். வீட்டு காப்பீடு எனும் போது வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள், வீட்டு சாதன பொருட்கள் சேதமடைந்திருந்தால் அதை சரி செய்ய பணம் கொடுப்பார்கள்.
அது போல் டிவி உள்ளிட்ட பொருட்களுக்கும் இன்சூரன்ஸ் போடலாம். இதனால் டிவியில் எந்த பழுது ஏற்பட்டாலும் அதை விதிகளுக்கு உள்பட்டு பைசா செலவில்லாமல் செய்து கொள்ளலாம். அது போல் அவற்றை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் விற்கும் போது சாதாரணமாக 1000 ரூபாய்க்கு எடுப்பதாக கூறப்படும் டிவிகள் அது வாங்கப்பட்ட ஆண்டுகளை கணக்கிட்டு 50 சதவீதம் வரை எடுத்துக் கொள்கிறார்கள். இது ஆன்லைனிலும் இந்த வசதி உள்ளது.












Click it and Unblock the Notifications