அதிமுக-பாஜக-தவெக கூட்டணி.. விஜயின் அரசியலுக்கே பெரிய சிக்கல்.. ஸ்டாலினுக்கு போன உளவு ரிப்போர்ட்
சென்னை: அதிமுக - பாஜக - தவெக இடையே கூட்டணி வந்தாலும் அது விஜய்க்கு சாதகமாக இருக்காது.. ஆளும் திமுகவிற்கே சாதகமாக இருக்கும் என்று உளவுத்துறை சார்பாக ரிப்போர்ட் ஒன்று முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது விஜய் தனித்து நின்றால் பெரிய போட்டியாக இருப்பார்.. ஆனால் கூட்டணிக்கு போனால் அவருக்கான பலம் குறைந்துவிடும் என்று உளவுத்துறை சார்பாக ரிப்போர்ட் ஒன்று முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

திமுக எடுத்த சர்வே
ஆளும் திமுக ரகசியமாக நடத்திய கருத்துக் கணிப்பின்படி, நடிகர் விஜய் அரசியலில் எதிர்கொள்ளும் சவால்கள் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
தி பிரிண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள இந்த செய்தியில், ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால் 23 சதவீத வாக்குகளைப் பெறும் என திமுக தரப்பு நடத்திய உட்கட்சி சர்வே கணித்துள்ளது. இந்த ஆய்வின்படி, தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வலுவான ஆதரவு இருப்பதும், திமுக-வுக்கு ஒரு முக்கிய போட்டியாளராக அந்த கட்சி மாறக்கூடும் என்பதும் தெரிய வந்துள்ளது. 2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 1,245 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் தவெக ஆகிய கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தால், திமுக 50 சதவீத வாக்குகளையும், என்.டி.ஏ 35 சதவீத வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி (என்.டி.கே) 12 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 3 சதவீத வாக்குகளையும் பெறுவார்கள் என இந்த ரகசிய ஆய்வு குறிப்பிடுகிறது.
பா.ஜ.க, அ.தி.மு.க, தமிழக வெற்றிக் கழகம் இணைந்து 35 சதவீத வாக்குகளைப் பெற்றாலும், அ.தி.மு.க-வில் உள்ள உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை தமிழக வாக்காளர்கள் எதிர்க்கும் போக்கு ஆகியவை இக்கூட்டணியின் வளர்ச்சியைத் தடுக்கலாம் என்றும் சர்வே கூறுகிறது.
தமிழக வெற்றிக் கழக தனித்துப் போட்டியிடும் சூழ்நிலையில், திமுக-வின் வாக்கு சதவீதம் 45 ஆக குறையலாம். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி 22 சதவீத வாக்குகளையும், விஜயின் கட்சி 23 சதவீத வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு 5 சதவீதமாகக் குறையக்கூடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இணையலாமா அல்லது பாஜக அல்லாத அதிமுக கூட்டணியில் இணையலாமா என்று விஜய் யோசித்து வருகிறாராம்.
ஸ்டாலினிடம் சென்ற ரிப்போர்ட்
இப்போது இதே சர்வே போன்ற ரிப்போர்ட்தான் முதல்வரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதிமுக - பாஜக - தவெக இடையே கூட்டணி வந்தாலும் அது விஜய்க்கு சாதகமாக இருக்காது.. ஆளும் திமுகவிற்கே சாதகமாக இருக்கும் என்று உளவுத்துறை சார்பாக ரிப்போர்ட் ஒன்று முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது கட்சி சார்பாக எடுக்கப்படாமல் முறையாக உளவுத்துறை சார்பாக எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிலும் கூட்டணி அமைத்தால் விஜய்க்குத்தான் சிக்கல் என்று இருக்கிறதாம்.
தீவிரமாக யோசிக்கும் விஜய்
ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் இணையலாமா? அல்லது அதிமுகவுடன் மட்டும் தனியாக கூட்டணி வைக்கலாமா? என்று விஜய் தீவிர ஆலோசனை செய்து வருகிறாராம்.
பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறி வருகிறார். அவர்களுடன் முதல் தேர்தலே கூட்டணி வைத்தால் விஜய் அரசியல் முடிவிற்கு வரும். பாஜகவின் மத ரீதியிலான அரசியல் விஜய் முன்னெடுக்கும் சமூக நீதி அரசியலுக்கு பெரிய சிக்கலாகும். விஜய் தலித், கிறிஸ்துவர்கள் வாக்குகள் குறி வைக்கிறார். ஆனால் அவர் பாஜக உள்ள கூட்டணிக்கு சென்றால் அது விஜய்க்கு சிக்கலாகும்.
விஜய் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால்.. பாஜக கூட்டணியை முறித்துவிட்டு வாருங்கள் என்று எடப்பாடியிடம் கூற வேண்டும். இதை எடப்பாடி ஏற்பாரா.. டெல்லி பாஜக அனுமதிக்குமா? என்ற கேள்வி உள்ளது. விஜய்க்கு இருக்கும் பெரிய சவாலே இதுதான். விஜய் இதை எப்படி சமாளிப்பார்.. என்ன மாதிரியான முடிவுகளை இதில் எடுப்பார் என்ற பெரிய கேள்வி நிலவி வருகிறது.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications